சார்ள்டன் ஹெஸ்டன்

சார்ள்டன் ஹெஸ்டன் (Charlton Heston) (அக்டோபர் 4, 1923ஏப்ரல் 5, 2008) ஓர் அமெரிக்க திரைப்பட நடிகராவார். பல ஹாலிவுட் திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் - டென் கமாண்ட்மெண்ட்ஸ் படத்தில் மோசஸாக, பிளானெட் ஆஃப் ஏப்ஸ் படத்தில் விண்வெளிவீரர் கர்னல் ஜார்ஜ் டெய்லராக,ஆஸ்கார் விருது பெற்ற பென்ஹராக- நடித்து புகழ் பெற்று விளங்கினார்.

சார்ள்டன் ஹெஸ்டன் 1963

அவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். தனது இளம்வயதில் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டிருந்த ஹெஸ்டன், மார்ட்டின் லூதர் கிங்குடன் 1960களில் குடியுரிமை போராட்டங்களில் கலந்து கொண்டார். அந்தக் காலகட்டங்களில் ஒரு ஹாலிவுட் நடிகர் இவ்வாறு உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்வது அரிய செயலாகும். 1998 முதல் 2003 வரை அவர் தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராக இருந்து துப்பாக்கி வைத்திருப்போரின் உரிமைகளுக்காக போராடினார்.

முதிய வயதில் ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டார். தமது 84ஆம் வயதில் 2008ஆம் ஆண்டு நியுமோனியா குளிர்சுரத்தினால் மரணமடைந்தார்.

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.