சார்லஸ் தெ ஃபூக்கோ

அருளாளர் சார்லஸ் தெ ஃபூக்கோ (Charles de Foucauld, செப்டம்பர் 15, 1858 டிசம்பர் 1, 1916) என்பவர் ஒரு பிரென்சு கத்தோலிக்க குருவும் துவாரெக் மக்களிடையே அல்சீரியாவில் உள்ள சகாராவில் வாழ்ந்த ஒரு துறவியும் கத்தோலிக்க திருச்சபையில் அருளாளர் பட்டம் பெற்றவரும் ஆவார். இவரது எழுத்துக்களே இயேசுவின் சிறிய சசோதரர்கள் என்னும் துறவறசபை நிறுவப்பட வழிவகுத்தது என்பர்.

அருளாளர்
சார்லஸ் தெ ஃபூக்கோ
சுமார் 1907இல் ஃபூக்கோ
மறைசாட்சி
பிறப்புசெப்டம்பர் 15, 1858(1858-09-15)
ஸ்ட்ராஸ்பேக், பிரான்சு
இறப்புதிசம்பர் 1, 1916(1916-12-01) (அகவை 58)
தாமன்ராசெத், பிரென்சு அல்ஜீரியா
அருளாளர் பட்டம்பதினாறாம் பெனடிக்ட்-ஆல் 13 நவம்பர் 2005
திருவிழா1 டிசம்பர்
1911இல் ஃபூக்கோ கட்டிய மடம். தாமன்ராசெதிலிருந்து 80 கி.மி தொலைவில் தெற்கு அல்சீரியாவில் இருக்கின்றது
அல்சீரியாவில் உள்ள ஃபூக்கோவின் கல்லரை
ஃபூக்கோவின் கையொப்பம்

இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவரின் தாத்தா இவரை வளர்த்தார். இவர் பிரஞ்சு இராணுவத்தில் ஒரு அதிகாரியாக வடஆப்பிரிக்காவில் இருந்தபோது இவருக்கு தனிமையில் இறைவனைக்காண வேண்டும் என வலுவான உணர்வுகள் உண்டானது. ஆதலால் இவர் பிரான்சுக்குத் திரும்பிவந்து தனது 28ஆம் வயதில் மனம்மாறினார்.

1890இல் சிஸ்டேரியன் டிராப்பிஸ்ட் துறவற சபையில் சேர்ந்த இவர், அங்கு மனநிறைவு அடையாத்தால் அங்கிருந்து வெளியேறி 1897இல் நாசரேத்துக்கு சென்றார். அங்கே தனிமையிலும் தபம் மற்றும் செபத்திலும் தன் வாழ்வைக்கழித்தார். பின்னர் 1901இல் பிரான்சுக்குத்திரும்பி தனது 43ஆம் அகவையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இதன் பின்னர் அல்சீரியாவில் உள்ள சகாராவில் வனவாசியைப்போல வாழ்ந்துவந்தார். துவாரெக் மக்களுக்கு பணிசெய்ய அவர்களோடு பத்துவருடம் தங்கியிருந்து அவர்களின் மொழி, கலாச்சாரம் முதவியவைகளைக் கற்று அவர்களின் மொழிக்கு ஒரு அகராதியினை எழுதினார். ஆனால் இவ்வகராதி இவரின் இறப்புக்குப்பின்னரே அச்சாகி வெளியானது.

துவாரெக் மக்களின் பாதுகாப்புக்காக இவரே கட்டிய கோட்டையின் கதவின் வெளியே 1916ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கத்தோலிக்க திருச்சபையினால் ஒரு மறைசாட்சி என கருதப்படுகிறார்.[1]. இவருக்கு 13 நவம்பர் 2005 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அருளாளர் பட்டம் அளித்தார்.

படக்காட்சியகம்

ஆதாரங்கள்

  1. Charles de Foucauld beatified in Rome
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.