சாரசு விதி
சாரசு விதி (Sarrus' rule, Sarrus' scheme) என்பது, ஒரு 3×3 அணியின் அணிக்கோவையின் மதிப்பினைக் கணக்கிடும் நினைவி முறையாகும். இவ்விதி, பிரெஞ்சு கணிதவியலாளர் பியர்ரே பிரெடெரிக் சாரசுவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

சாரசு விதி: 3×3 அணியின் அணிக்கோவையின் மதிப்பு, படத்தில் திடக்கோடுகளாக உள்ள மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்குத்தொகைகளின் கூட்டுத்தொகையிலிருந்து இடைக்கோடுகள் குறிக்கும் மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்குத்தொகைகளின் கூட்டுத்தொகையைக் கழிக்கக் கிடைக்கும் விடையாகும்.
சாரசு விதியைப் பயன்படுத்தி 3×3 பொதுஅணியின் அணிக்கோவையைக் காணல்:
- மூன்றாவது நிரலுக்கு வலப்புறம் முதல் இரண்டு நிரல்களையும் மீண்டும் எழுதிக் கொள்ள மொத்தம் ஐந்து நிரல்கள் இருக்கும்.
- மேல்முனையிலிருந்து கீழ்நோக்கி அமையும் மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்குத்தொகைகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிட வேண்டும்.
- கீழிருந்து மேல்நோக்கி அமையும் மூலைவிட்ட (இடைவிட்டக் கோடுகள்) உறுப்புகளின் பெருக்குத்தொகைகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிட வேண்டும்.
- முதல் கூட்டுத்தொகையிலிருந்து இரண்டாவது கூட்டுத்தொகையைக் கழிக்கக் கிடைப்பது அணிக்கோவையின் மதிப்பாகும்.

நெடுவரிசை அமைப்பு கொண்ட மாற்று முறை
இதேமுறையில் 2x2 அணிகளின் அணிக்கோவை:
மேற்கோள்கள்
- Paul Cohn: Elements of Linear Algebra. CRC Press, 1994, ISBN 9780412552809, pp. 69
- Khattar, Dinesh (2010). The Pearson Guide to Complete Mathematics for AIEEE (3rd ). Pearson Education India. பக். 6-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-2126-1. https://books.google.com/books?id=7cwSfkQYJ_EC&pg=SA6-PA2.
- Fischer, Gerd (1985) (in German). Analytische Geometrie (4th ). Wiesbaden: Vieweg. பக். 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-528-37235-4.
வெளியிணைப்புகள்
- Sarrus' rule at Planetmath
- Linear Algebra: Rule of Sarrus of Determinants at khanacademy.org
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.