சாய் பல்லவி

சாய் பல்லவி செந்தாமரை (Sai Pallavi Senthamarai) என்பவர் திரைப்பட நடிகை பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அறியப்படுகிறார்.[1] இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது.[2][3]

சாய் பல்லவி
தேசியம்இந்தியன்
பணிமருத்துவர்,
நடிகை,
நடனமாடுபவர்,
பாடகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2015 - தற்போது வரை
அறியப்படுவதுமலர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிரேமம் (திரைப்படம்)

சாய் பல்லவி தன்னுடைய தொழில் மூலம் சுகாதாரத்துறையுடன் தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு, சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.[4]

தொடக்கக்கால வாழ்க்கை

தமிழ் நாட்டிலுள்ள கோத்தகிரியில் [5] செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக சாய் பல்லவி பிறந்தார். இவருடைய இளைய சகோதரி பூசா கண்ணன் ஆவார். இவரும் ஒரு திரைப்பட நடிகையாவார்.[6] சாய் பல்லவி வளர்ந்தது கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர் ஆகும். சாய் பல்லவி 2016 இல் சியார்ச்சியா நாட்டில் டிபிலிசு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார்.[7].

வாழ்க்கைப் பணி

சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக இவர் 2008 ஆம் ஆண்டு விசய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்நேர நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார். 2009 இல் இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

திரைப்பட வாழ்க்கை

தொடக்கத்தில் சாய் தாம் தூம், கசுத்தூரி மான் போன்ற சில திரைப்படங்களில் தோன்றினார்.[8][9] 2014 ஆம் ஆண்டில் சியார்ச்சியாவிலுள்ள டிப்லிசியில் சாய் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் அல்போன்சு புத்தாரென் தன்னுடைய பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். கல்லூரியின் விடுமுறை நாட்களில் மட்டும் சாய் படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் சாய் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிவிடுவார்.[10][11] அந்த ஆண்டில் சாய் பிலிம்பேரின் சிறந்த அறிமுக பெண் நடிகை உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.

2015 ஆம் ஆண்டில் சாய் பல்லவி தன்னுடைய இரண்டாவது திரைப்படமான கலியில் நடித்தார். இப்படம் 2016 இல் வெளியிடப்பட்டது.[12][13][14].

ஒரு கணவனின் பொல்லாத கோபத்திற்கு ஆளாகும் அஞ்சலி என்ற இளம் மனைவியாக சாய் இப்படத்தில் நடித்தார், மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதிற்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.[15][16].

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சேகர் கம்முலாவின் பிடே என்ற திரைப்படத்தில் தெலுங்காணாவிலிருந்து வரும் பானுமதி என்ற சுதந்திரமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.[17][18][19].

இயக்குநர் ஏ.எல். விசயின் கரு என்ற திரைப்படம் இவருக்கு அடுத்த படமாக அமைந்தது.[20] தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

மாரி என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படும் மாரி 2 என்ற திரைப்படத்தில் தனுசுக்கு எதிரான நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரு மொழித் திரைப்படமாக எடுக்கப்படும் இப்படத்தை பாலாசி மோகன் இயக்குகிறார்.[21][22]

சமீபத்தில் சாய் பல்லவியின் நடத்தையைப் பற்றி சில வதந்திகள் கூறப்பட்டன. படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதாகவும் தளத்தில் அநாகரிமாக நடந்து கொள்ளுவதாகவும் அண்மையில் ஒரு நேர்காணலில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்கும் நாகசூரியா தெரிவித்துள்ளார். இப்பேட்டி சாய் பல்லவியின் திரை வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.[23]

நாகசூரியாவின் கருத்துக்களை தான் பெரிதும் மதிப்பதாகவும், ஆனால் அந்த வதந்திகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியாது என்றும் பல்லவி தெரிவித்துள்ளார்.[24][25] சர்வானந்த் உடன் படிபடி லெச்ச மனசு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க, 2018 பிப்ரவரியில் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2005 கஸ்தூரி மான் கல்லூரி மாணவி தமிழ் குறிப்பிடப்படாத பாத்திரம்
2008 தாம் தூம் கங்கனாவின் தோழி தமிழ் குறிப்பிடப்படாத பாத்திரம்
2015 பிரேமம் மலர் (ஆசிரியர்) மலையாளம் முதல் மலையாள படம்
2016 கலி அஞ்சலி மலையாளம் மலையாள படம்
2017 ஃபிதா பானூமதி தெலுங்கு முதல் தெலுங்கு படம்
மிடில் க்லாஸ் அப்பாயி பல்லவி/சின்னி தெலுங்கு தெலுங்கு படம்
2018 கரு தமிழ் முதல் தமிழ் படம்
கனம் தெலுங்கு தெலுங்கு படம்
மாரி 2 ஆனந்தி தமிழ் தமிழ் படம்
சூரியா 36 தமிழ் தமிழ் படம்
ஹனு ராகவபுடி யின்

பெயர் வைக்க படாத படம்

தெலுங்கு தெலுங்கு படம்
2018 பாடி பாடி லீஷ் மனசு


வைசாலி தெலுங்கு தெலுங்கு படம்

இதனையும் காண்க

  • மலையாளத் திரைப்படத்துறை

மேற்கோள்கள்

  1. Anu James (June 7, 2015). "Malar of 'Premam' Becomes Fan Favourite; Sai Pallavi's Dancing Videos Go Viral". International Business Times. http://www.ibtimes.co.in/malar-premam-becomes-fan-favourite-sai-pallavis-dancing-videos-go-viral-634893.
  2. "Massive TRP Ratings for Fidaa". nowrunning.com (6 October 2017).
  3. "Dhruva lost to Fidaa in TRP ratings war". telugusquare.com (8 October 2017).
  4. Jayaram, Deepika (January 24, 2017). "It's Dr Sai Pallavi now!". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Its-Dr-Sai-Pallavi-now/articleshow/52362168.cms. பார்த்த நாள்: 16 August 2017.
  5. Deepika, Jayaram (14 June 2016). "Sai Pallavi enjoys her breaktime at her hometown". IB Times. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Sai-Pallavi-enjoys-her-breaktime-at-her-hometown/articleshow/52747221.cms. பார்த்த நாள்: 25 August 2016.
  6. "Sai Pallavi's sister, Pooja to make her acting debut sampath is - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sai-Pallavis-sister-Pooja-to-make-her-acting-debut/articleshow/55116853.cms.
  7. Deepika, Jayaram. "It's Dr Sai Pallavi now!". http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/its-dr-sai-pallavi-now/articleshow/52362168.cms.
  8. Anu, James (23 November 2015). "'Premam' is not Sai Pallavi's debut film [VIDEO"]. IB Times. http://www.ibtimes.co.in/premam-not-sai-pallavis-debut-film-video-656197. பார்த்த நாள்: 25 August 2016.
  9. "If you are a 'Malar' fan, this short film starring Sai Pallavi is a must-watch...". Manoramaonline.com (Malayala Manorama). 7 April 2016. http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/sai-pallavi-short-film-kaatchi-pizhai.html. பார்த்த நாள்: 25 August 2016.
  10. James, Anu. "365 days of 'Premam': Why is Nivin Pauly-starrer so special even after one year of release?" (in en). International Business Times, India Edition.
  11. "From Malar in Premam to Bhanumati in Fidaa, Sai Pallavi is winning hearts all over - Pinkvilla South" (in en-US). Pinkvilla South. https://regional.pinkvilla.com/telugu/news/malar-premam-bhanumati-fidaa-sai-pallavi-winning-hearts/.
  12. Sudhi, CJ (6 June 2015). "I am like Malar: Sai Pallavi". Manoramaonline.com (Malayala Manorama). http://english.manoramaonline.com/entertainment/interview/sai-pallavi-as-malar-nivin-pauly-starrer-alphonse-puthren-movie-premam.html. பார்த்த நாள்: 16 March 2016.
  13. Rao, Subha J. (26 October 2015). "Actress Sai Pallavi on Premam". தி இந்து. http://www.thehindu.com/features/metroplus/actress-sai-pallavi-on-premam/article7805886.ece. பார்த்த நாள்: 16 March 2016.
  14. Sai Pallavi opposite Maddy in 'Charlie' remake!. Siffy (19 January 2017)
  15. Santhosh, Megna. "A raging Battle with Anger - Desimartini.com" (in en). Desimartini. http://www.desimartini.com/reviews/megna-santhosh-kali/rd35154md4635.htm.
  16. "Kali Movie Review: Dulquer Salmaan & Sai Pallavi Nail It!" (in en). filmibeat.com. 2016-03-26. https://www.filmibeat.com/malayalam/reviews/2016/kali-movie-review-dulquer-salmaan-sai-pallavi-nails-it-220510.html.
  17. "IndiaGlitz - Make way for Sai Pallavi - Telugu Movie News". http://www.indiaglitz.com/make-way-for-sai-pallavi-telugu-news-190899.html.
  18. "Fidaa actor Sai Pallavi: The girl, who stole hearts with Premam, is now back on the silver screen" (in en-US). The Indian Express. 2017-07-21. http://indianexpress.com/photos/entertainment-gallery/fidaa-actor-sai-pallavi-the-girl-who-stole-hearts-with-premam-is-now-back-on-the-silver-screen-4760472/.
  19. "Fidaa movie review: Sai Pallavi is the heart and soul of this film" (in en-US). The Indian Express. 2017-07-21. http://indianexpress.com/article/entertainment/movie-review/fidaa-movie-review-sekhar-kammula-sai-pallavi-star-rating-4760855/.
  20. "Karu first look: Sai Pallavi film looks intriguing. Is this the Tamil debut she was waiting for? See photo" (8 June 2017).
  21. "Dhanush's Maari 2 Is Trending. Here's Why".
  22. "Sai Pallavi to star in Dhanush’s Maari 2 - Times of India".
  23. "Hero skips Audio Launch! What's The Matter?". english.tupaki.com (25 February 2018).
  24. "Sai Pallavi finally responds to Naga Shaurya’s ‘tantrums’ allegations". timesofindia.indiatimes.com (27 February 2018).
  25. "Sai Pallavi Opens Up On Naga Shourya's Allegations". gulte.com (27 February 2018).

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.