சாம்பசிவம்-ஞானாமிர்தம் (புதினம்)

சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்பது 1927 ஆம் ஆண்டில் மலேசியா, கோலாலம்பூரில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் புதின நூல் ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து பிரித்தானிய மலேயா, மற்றும் சிங்கப்பூர் புலம்பெயர்ந்தவர்களில் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அ. நாகலிங்கம் இதனை எழுதியிருந்தார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சாம்பசிவம்-ஞானாமிர்தம்
அல்லது நன்னெறிக் களஞ்சியம்
நூல் பெயர்:சாம்பசிவம்-ஞானாமிர்தம்
அல்லது நன்னெறிக் களஞ்சியம்
ஆசிரியர்(கள்):அ. நாகலிங்கம்
வகை:புதினம்
துறை:கற்பனைக் கதை
இடம்:கோலாலம்பூர்,
மலேசியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:344
பதிப்பகர்:எஸ். லாசர் அண்ட் சன்சு,
கோலாலம்பூர்
பதிப்பு:1927
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

ஈழத்தில் இருந்து வெளியான புதின நூல்களில் முதன் முறையாக சித்திரங்கள் வரையப்பட்டு வெளிவந்த புதினம் இதுவே. 344 பக்க நூலில் மொத்தம் 11 பக்கங்களில் கதைக்கேற்பச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.

ஆசிரியர்

ஆசிரியர் அருணாசலம் நாகலிங்கம் (1901 - 1979) யாழ்ப்பாணத்தில் இருந்து மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தவர். இந்நூலின் விற்பனையில் இருந்து பெறப்பட்ட பணத்தை தனது பிறந்த ஊரான காரைநகரில் தண்ணீர்த் தாங்கி ஒன்றை நிறுவுவதற்காகப் பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் நூலில் குறிப்பிட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மாநில சுல்தான் சேர் முகம்மது ஷா இதற்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார்[1].

நூலில் அணிந்துரைகள் வழங்கியவர்கள்

மதிப்புரைகள் வழங்கியோர்

  • லோகோபகாரி (சென்னை)
  • கலிகால தீபம்
  • தமிழ் நேசன், கோலாலம்பூர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.