சாமுண்டீஸ்வரி கோயில்

சாமுண்டி கோயில் (Chamundeshwari Temple) (ಶ್ರೀ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ಥಾನ), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.[1] சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும்.

சாமுண்டேஸ்வரி கோயில்
சாமுண்டேஸ்வரி கோயில் கோபுரம்
சாமுண்டேஸ்வரி கோயில்
கர்நாடகா மாநிலத்தில் சாமுண்டிக் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகா
மாவட்டம்:மைசூர்
அமைவு:சாமுண்டி மலை
ஆள்கூறுகள்:12.272474°N 76.670611°E / 12.272474; 76.670611
கோயில் தகவல்கள்
மூலவர்:சாமுண்டி
சிறப்பு திருவிழாக்கள்:நவராத்திரி

மகாசக்தி பீடங்கள்

சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சாமுண்டிக் கோயில், 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும்.

வரலாறு

சாமுண்டிக் கோயில் கி பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, கி பி 1659ல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது. [2] சாமுண்டி மலையில் 800வது படிக்கட்டில் அமைந்துள்ள சிறு சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை உள்ளது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Chamundi Hills".
  2. "Chamundeswari Hill Temple (ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ತಾನ) - Mysore(ಮೈಸೂರು)". பார்த்த நாள் 2006-09-12.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.