சாந்த் பௌரி

சந்த் பெளரி (Chand Baori) என்ற பெயருடைய 3,500 படிக்கட்டுகள் கொண்ட இக்கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அபாநேரி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த படிக்கிணறு 13 தளங்களுடனும், நூறு அடி ஆழமும் கொண்டது.

சந்த் பெளரி கிணறு

அமைவிடம்

அபாநேரி கிராமம் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 95 கிலோமீட்டர்கள் தொலைவில், தௌசா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் ஜெய்ப்பூர் - ஆக்ரா செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு 800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹர்ஷத் மாதா கோவில் ஒன்று உள்ளது.[1][2] இக்கிணறு இக்கோவிலைச் சார்ந்தது. இதன் அமைவிடம் 27.0072°N 76.6068°E / 27.0072; 76.6068 ஆகும்.

வரலாறு

சாந்த் பெளரி ராஜஸ்தானின் மிகப்பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும்.[3] இது சந்த் ராஜாவால் கட்டப்பட்டது. நிகும்பா வம்சத்தினரால் பொதுவருடம் 800-கும் 900-க்கும் இடையில் கட்டப்பட்டது.[3] ஹர்ஷத் மாதா மகிழ்ச்சிக்கும், பூரிப்பிற்கும் உரிய கடவுளாகும்.[4] இக்கிணறானது நீர் சேமிக்கும் அமைப்பிற்காக கட்டப்பட்டது. கிணற்றின் அடியில் காணப்படும் நீரானது வெளிப்புற வெப்பத்தைவிட 5-6 பாகைகள் (degrees) குறைவாக இருக்கும். அதிக வெப்பமான காலங்களில் மக்கள் இக்கிணற்றங்கரையில் கூடுவதும் வழக்கம்.[4]

புகைப்படங்கள்

சந்த் பெளரியின் புகைப்படங்களுள் சில கீழே,

காணொளிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.