சாந்தி சாதனா பதிப்பகம்
சாந்தி சாதனா பதிப்பகம் என்பது தமிழ் இலக்கியங்களுக்கு முறையான பதிப்புகள் வெளியிட வேண்டுமென்ற நோக்கத்துடன் மர்ரே ராஜத்தால் துவக்கப்பட்ட சாந்தி சாதனா அறக்கட்டளை யின் பதிப்பகம் ஆகும். [1]
வரலாறு
1940களில் தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளையை ராஜம் சந்தித்துப் பேசியபோது, அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சந்தி பிரித்த பதிப்புகளாக பழந்தமிழ் இலக்கியங்களுக்குக் கொண்டுவர வேண்டும் என ராஜத்திடம் வலியுறுத்தியிருக்கிறார். இதனால் உந்தப்பட்டு ராஜம் வையாபுரிப்பிள்ளையை பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்புப் பணிகளை தொடங்கினார். முதல் நூலாக, திவ்யபிரபந்தத்தின் முதலாயிரம் சந்தி பிரிக்கப்பட்டு 1955 இல் வெளியானது. எஸ். ராஜம், நெ 5, தம்புச்செட்டித் தெரு, சென்னை-01 என்ற முகவரியில் இருந்து பதிப்பகம் செயல்படத்தொடங்கியது.
வையாபுரிப்பிள்ளை, பெ. நா. அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி. மு. சுப்பிரமணிய ஐயர், பி. ஸ்ரீ ஆச்சார்யா, கி. வா. ஜகந்நாதன், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை முதலான மகத்தான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவைக் கொண்டு சாந்தி சாதனாவால் பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என்று 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தரமான அச்சில் மலிவு விலையில் வெளியிடப்பட்டன. குறிப்பாக இவர்கள் வெளியிட்ட பேரகராதிகளான வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி , தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி ஆகியன குறிப்பிடத்துக்கன.[2]
மேற்கோள்கள்
- இரா. வெங்கடேசன் (2011 ஏப்ரல் 22). "எளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்". கட்டுரை. http://bookday.co.+பார்த்த நாள் 16 அக்டோபர் 2016.
- "மர்ரே ராஜமும் பொக்கிஷப் பதிப்புகளும்!". கட்டுரை. தி இந்து (2016 அக்டோபர் 15). பார்த்த நாள் 16 அக்டோபர் 2016.