சாத்தூர் ராமச்சந்திரன்
சாத்தூர் ராமச்சந்திரன் (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.
சாத்தூர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் | |
---|---|
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சர் | |
தொகுதி | சாத்தூர் |
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 8, 1949[1] கோபாலபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | சென்னை |
ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் ஆகத்து 8, 1949ஆம் ஆண்டு பிறந்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறுமுறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒருமுறையும், மொத்தம் ஏழு முறை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பணியாற்றி வருகிறார்.[2]
வெளி இணைப்புகள்
- தமிழ்நாடு சட்டமன்றம். 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் யார் எவர்? 1977'. சட்டமன்றக் குழு, 1977, p. 164.
- https://tamil.oneindia.com/news/tamilnadu/kssrr-ramachandran-dares-azhagiri-196396.html