சாத்தானிக் வெர்சஸ்

சாத்தானிக் வெர்சஸ் (Satanic Verses, அல்லது கரானிக் நிகழ்வு) என்ற நிகழ்வு குரானை காபிரியல் கூறியவாறு முகமது நபி சொல்லிக்கொண்டு வந்தபோது அவரையறியாது உட்செருகப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பாகால் தெய்வங்களைத் தொழும்படியான வரிகளாகும். ஒரே கடவுள் கொள்கையை போதித்த நபி, இவற்றைக் கூற ஆதாரம் இல்லை என்று (ஐயமிகு ஹாடித்) இவ்வரிகள் நீக்கப்பட்டன.

நீக்கப்பட்ட இந்த வரிகளை அல் வாகிடி, அவரது எழுத்தர் இபன் சாத் இவர்களது "நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றில்" காணக் கிடைக்கின்றன. இந்த வரிகளை முதன்முதலாக சாத்தானின் கவிதைகள் என்ற பொருள்பட சாத்தானிக் வெர்சஸ் என வில்லியம் முயர் அழைத்ததாகக் கூறப்படுகிறது.[1]

உசாத்துணைகள்

மேற்கோள்கள்

  1. John L. Esposito (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. பக். 563. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-512558-0. http://books.google.com/books?id=Bcis07kDq30C&pg=PT563.

வெளியிணைப்புகள்

மதிப்புரைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.