சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு

சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு, பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பவரால் 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரைத்துறையில் வெளியான பல்லாயிரக் கணக்கான திரைப்படங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள், படங்கள் வெளியான ஆண்டு, மாதம், தேதி, நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று அத்தனை விவரங்களையும் தொகுக்கப்பட்ட நூலாகும்.

சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு
சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு
நூலாசிரியர்பிலிம் நியூஸ் ஆனந்தன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைதமிழ்த்திரைப்பட வரலாறு
வகைதிரைத்துறை வரலாறு
வெளியீட்டாளர்சிவகாமி பப்ளிகேஷன்ஸ், சென்னை
வெளியிடப்பட்ட திகதி
23 அக்டோபர் 2004
OCLC843788919

"ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்த ஆனந்தனிடம் இருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது. [1]

உசாத்துணை

  1. "அரசாணை நிலை எண் 168". பார்த்த நாள் அக்டோபர் 17, 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.