சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி

சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி ( Colonia del Sacramento ) உருகுவையின் தென்மேற்குப் பகுதியில் ரியோ டி லா பிளாட்டா என எசுப்பானியத்தில் அழைக்கப்படும் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். இது அர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் நகரை நோக்கியவண்ணம் உள்ளது. உருகுவையின் பழைமையான நகரங்களில் ஒன்றான இது கொலோனியா மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இதன் மக்கள்தொகை 26,231 ஆகும்.[1]

சாக்ரமெந்தோ குடியேற்றப் பகுதி
Colonia del Sacramento
தலைநகரம்
சான்டிசிமோ சாக்ரமெந்தோ பெருங்கோவில்
நாடு உருகுவை
ஆட்சிப்பிரிவுகொலோனியா மாவட்டம்
நிறுவப்பட்டது1680
நிர்மாணித்தவர்மானுவல் லோபோ
ஏற்றம்27
மக்கள்தொகை (2011)
  மொத்தம்26,231
நேர வலயம்ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் -3
அஞ்சல் குறியீடு70000
தொலைபேசி அழைப்புமுறை+598 452 (+5 எண்கள்)
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கொலோனியா டெல் சாக்ரமெந்தோ நகரின் வரலாற்று பகுதிகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுiv
உசாத்துணை747
UNESCO regionஇலத்தீன அமெரிக்கா மற்றும் கரீபியன்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1995 (19வது தொடர்)

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரம் ஓர் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். தற்கால சாக்ரமெந்தோவின் முதன்மைத் தொழிலாக துணித் தயாரிப்பு விளங்குகிறது. இங்கு ஓர் கட்டற்ற வணிக வலயம், பல்தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல அரசுக் கட்டிடங்கள் உள்ளன.

மேற்சான்றுகள்

  1. "censos2011". பார்த்த நாள் 25 சூன் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.