சரவாக் மக்கள் கட்சி
சரவாக் மக்கள் கட்சி (மலாய்: Parti Rakyat Sarawak, ஆங்கிலம்:Sarawak Peoples' Party, சீனம்: 砂拉越人民党) என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். 2004ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.
சரவாக் மக்கள் கட்சி Sarawak Peoples' Party 砂拉越人民党 | |
---|---|
தலைவர் | ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் |
தொடக்கம் | 2004 |
தலைமையகம் | ![]() |
இளைஞர் அமைப்பு | இளைஞர் அணி |
கொள்கை | மைய அதிகார ஒருமிப்புக்கொள்கை, தேசியவாதம் |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் |
நிறங்கள் | பச்சை, மஞ்சள், சிகப்பு |
இணையதளம் | |
Official PRS Facebook |
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியை பி.ஆர்.எஸ் என்று சுருக்கமாக அழைப்பார்கள். 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சரவாக் டாயாக் இனக் கட்சி பதிவுத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் பின் தோற்றமே சரவாக் மக்கள் கட்சி ஆகும்.
இந்தச் சரவாக் மக்கள் கட்சி சரவாக் மாநிலத்தில் வாழும் டாயாக் மக்களில் ஒரு பிரிவினரைப் பிரதிநிதிக்கின்றது. டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் என்பவர் தற்போதையத் தலைவராக இருக்கிறார்.
சான்றுகள்
- The Dayak dilemma (Part 4)
- Khoo, Phillip (Jun, 2004) The Taming of the Dayak. Aliran Monthly
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.