சரசுவதி ஆறு (வங்காளம்)
சரசுவதி ஆறு பாகீரதி ஆற்றின் கிளைநதியாக இருந்த ஓர் ஆறு. கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பாகீரதி ஆற்றின் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. சரசுவதி ஆற்றுக்கு வந்த பாகீரதியின் நீர் ஹீக்ளி வழியாகச் சென்றது. எனவே இந்த ஆற்றின் மேல்பாகம் முழுதும் வறண்டு விட்டது. ஹௌரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெயில் எனும் இடத்திற்குக் கீழ் உள்ள சரசுவதி ஆற்றின் கீழ்ப்புறம் வழியாக பாகீரதி பாய்கிறது. [1]
வேதங்களில் குறிப்பிடப்படும் ஆறு குறித்து அறிய, காண்க சரசுவதி ஆறு.
மேற்கோள்கள்
- Majumdar, Dr. R.C., History of Ancient Bengal, First published 1971, Reprint 2005, pp. 2-3, Tulshi Prakashani, Kolkata, ISBN 81-89118-01-3.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.