சமூக ஊடகம்


சமூக ஊடகம் என்பது வலைத்தளங்களின் வழியாக தகவல், கருத்துக்கள், தொழில்சார் நலன்கள் மற்றும் வெளிப்பாட்டின் பிற வடிவங்களை உருவாக்கும் பகிர்வுக்கும் உதவும் ஊடகங்கள் ஊடாடும் கணினி நடுநிலை தொழில்நுட்பங்கள் ஆகும். தற்போது பல சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை கொண்டிருப்பதால் தெளிவான வரையறை கூறமுடியாது. இருப்பினும் சமூக ஊடகத்திற்கான பொதுவான பண்புகள் உள்ளன.[1]

இராணுவ வீரரின் கைபேசி திரையில் ஒரு முகநூல் பக்கம்.

சமூக ஊடகத்தின் தாக்கம்

எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பமாக இருந்தாலும் சாதக மற்றும் பாதக விளைவுகள் உண்டு.

நன்மைகள்

  1. தகவல் பறிமாற்றம்
  2. நிகழ்ப்படம் பதிவேற்றம்
  3. கருத்துக்கள் பறிமாற்றம்
  4. குழு உரையாடல்
  5. வேலைவாய்ப்பு தகவல் பெற
  6. பொழுதுபோக்கு
  7. உலக சமூகங்கள் அல்லது சர்வதேச நபர்களின் நட்புறவு என பல
  8. நமது சிறந்த படைப்புகள் அனைத்முதையும் சமுதாயத்தில் பரப்ப............ #

தீமைகள்

  1. தனிநபர் தகவல் திருட்டு
  2. சட்டவிரோத பதிவேற்றங்கள்
  3. தவறான பதிவுகள்
  4. அடிமையாதல்
  5. குணாதிசய மாற்றம் .[2]
  6. கலாச்சார கலப்பு
  7. தணிக்கை தொடர்பான பதிவுகள் என பல

தமிழகத்தில்

தமிழ்நாட்டில் மெரீனாப் புரட்சியில் சமூக ஊடகங்கள் பங்கு சிறப்பாக அமைந்தது. இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்களின் வழியே மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய முக்கியத்துவம் அறியச்செய்து ஒருங்கிணைத்தது. மேலும் உலக தமிழர்கள் என அனைவர்க்கும் மெரீனாப் புரட்சி பற்றிய அவ்வப்போது நிகழ்வுகளை நேரலையாக அறியச்செய்தது.

ஜல்லிக்கட்டு மெரீனா புரட்சி

இரவு நேரத்தில் தமது கைபேசியில் (செல்போன்) உள்ள விளக்கினை உயர்த்திக் காட்டி, அசைத்தல் [3]. விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஒத்ததாக இது அமைந்திருந்தது.

சில சமூக ஊடகங்கள்

  1. முகநூல்[4]
  2. இன்ஸ்ட்டாகிராம்
  3. வாட்சப்
  4. கூகுள்+ [5]
  5. மைஸ்பேஸ்
  6. லிங்டின்[6]
  7. பின்டெரெஸ்ட்
  8. சினாப்சாட்
  9. டம்ளர்
  10. வைபர்
  11. டுவிட்டர்[7]

மேற்கோள்கள்

  1. Obar, Jonathan A.; Wildman, Steve (2015). "Social media definition and the governance challenge: An introduction to the special issue". Telecommunications Policy 39 (9): 745–750. doi:10.1016/j.telpol.2015.07.014.
  2. Wang, Z.; Tchernev, J. M.; Solloway, T. (2012). "A dynamic longitudinal examination of social media use, needs, and gratifications among college students". Computers in Human Behavior 28 (5): 1829–1839. doi:10.1016/j.chb.2012.05.001.
  3. "மெரினாவில் லைட்ஸ் ஆஃப் : கைபேசி (செல்போன்) டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்". பார்த்த நாள் சனவரி 17, 2017.
  4. https://facebook.com முகநூல்
  5. https://plus.google.com கூகுள்+
  6. https://in.linkedin.com லிங்டின்
  7. https://twitter.com டுவிட்டர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.