சமண நாட்டங்கள்

சமண மதம் உலகியலை 12 கோணங்களில் பார்ப்பதாகச் சீவசம்போதனை என்னும் நூல் குறிப்பிடுகிறது. இவை சமணரின் சிந்தனைகள். [1]

சீவன் என்னும் உயிருக்கு நன்மை பயக்கும் சிந்தனைகள் இவை. இவற்றை 'அனுப்ரேக்ஷை' என்பர்.

சிந்தனை நாட்டமும், கதையும்

சிந்தனை நாட்டம்தமிழ் வழக்குகதை
அநித்தியம்நிலையாமைசகரன்
அசரணம்புகலின்மைமுண்டகௌசிகன்
ஏகத்துவம்தனித்தன்மைவராங்கன்
அன்னியத்துவம்உறவற்ற தன்மைஇராவணன்
சம்சாரம்பிறவி மாறுதல்வசந்த திலகை
உலகம்உலகப் பற்றுசுகுமாரன்
அகசித்துவம்அழுக்குகபௌமன்
ஆசிரவம்வினை முடிவுதுவிபாயண குமாரன்
சம்வரைவினையைத் தடித்தல்பாகுபலி குமாரன்
நிர்ஜரைவினையை உதிர்த்தல்புஷப தந்தை
தருமம்அறம்பூமிபாலன்
போதி துல்லபம்அறிவு பெறற்கருமைபடகஸ்தன்

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. சிந்தனையோடு தொடர்புடையனவாகக் குறிப்பிடப்படும் கதைகள் நம் புழக்கத்தில் இல்லை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.