சமசுகிருதமயமாக்கம்
சமசுகிருதமயமாக்கம் சாதி அடுக்கில் கீழே இருக்கும் பிரிவினர் சமூக சூழ்நிலைகளால் அதிகாரமும் செல்வாக்கும் செலுத்திய சமஸ்கிரத நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் தமது சமூக நிலையை இணையாக நிலைநிறுத்த முயற்சிப்பதைக் குறிக்கும். இது சமூகத்தின் பல நிலைகளில் நிகழும்.
மொழி மாற்றம்
சமஸ்கிருதமயமாக்கத்தால் தமிழ் மொழியில் சமஸ்கிரத சொற்கள் மிகுந்து முதன்மை பெற்றன. மொழி சிதைந்து மணிப்பிரவாளம் பிறந்தது. எழுத்து வடிவமும் சமஸ்கிரத மொழியை சிறப்பாக எடுத்தியம்பும் வண்ணம் மாற்றப்பட்டது.
சமய மாற்றம்
பல தரப்பட்ட சமய நம்பிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு அல்லது உள்வாங்கப்பட்டு இந்து சமஸ்கிரத சடங்குகளும் நம்பிக்கைகளும் முதன்மைப்படுத்தப்படும்.[1]
சமூக அமைப்பில் மாற்றம்
பக்தவத்சல பாரதி முன்வைக்கும் விமர்சனங்கள்
- "சாதியமைப்புகள் 'மூடிய' சமூக அமைப்பு கொண்டவை. இதில் எந்த ஒரு வகையான தகுதிப் பெயர்வை அடைந்தாலும் ஒரு முதலியார் ஒரு முதலியாரகவே இருக்க முடியும்."
- "கீழ்ச்சாதியினர் உயர்குடியாக்க முறையினால் தகுதி உயர்வை ஏற்படுத்திக் கொண்டால் அவர்கள் அனைவரும் மேல்சாதியினராக மாறிவிடுகின்றனரா? கீழ்ச்சாதிகள் காணாமல் போய்விட்டனவா?"
- "பிராமணர்கள் ஒரு தளத்தில் நவீனத்துவத்தின் மையத்தை நோக்கி நகர்வதும், மறுதளத்தில் கீழுள்ள சாதிகளின் பண்பாட்டை நோக்கி நகர்வதுமான இருதிசை மாற்றங்காளைக் கொண்டுள்ளனர்."
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- "அதாவது சாதிப்படி நிலையில் மேல்நிலையைச் சாதிப்பதற்கு அடித்தளச் சாதியினர் சமஸ்கிருதக் கலாச்சாரத்தை சுவீகத்துக் கொள்ள வேண்டும் என்பதாகத் தான் சுத்தி அமைந்தது. இது அடிப்படையில் உயர்சாதியினரை ‘‘தூய சாதியினர்’’ என்றும் அடித்தளச் சாதிகளைத் ‘‘தூய்மை அற்றோர்’’ என்றும் கூறும் பழைய பிராமணியத்தை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறது. அதே அடிப்படையில் சுத்தி எனும் சடங்கை நிகழ்த்துகிறது. இது அடித்தள மக்களை கேவலப்படுத்துவதாகும்." பஞ்சாபில் ஆரிய சமாஜம் ந.முத்துமோகன்
உசாத்துணைகள்
- பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.