சனசமூக நிலையம்
கூடுதல், பகிர்தல், அறிதல், விளையாடுதல் என சமூக தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படும் ஒரு சமூக நிறுவனமே சனசமூக நிலையம் ஆகும். பொதுவாக சனசமூக நிலையங்கள் இலாப நோக்கமற்ற, சமய/சாதி சார்பற்ற, அரசியல்/கட்சி சார்பற்ற, சமூக சேவையை முன்னிறுத்தும் உள்ளூர் மயப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இவற்றை சமய சார் அமைப்புகள் (கோயில், தேவாலையம், மசூதி), வியாபார நிலையங்கள், தனியார் அமைப்புகளில் இருந்து வேறுபடுத்தி பார்க்கலாம்.
சனசமூக நிலையங்களை பின்வருமாறும் வரையறை செய்யலாம்:
“ | ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருங்கிச் சேர்ந்து வசிக்கும் பல குடும்பங்கள் தமக்குள் எண்ணங்கள், குறிக்கோள்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், தொழில்கள் போன்ற ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ சில பொதுப் பண்புகளைக் கொண்டிருக்குமாயின் அது சுற்றுப்புறச் சமூகம் என்ற ஆதார நிறுவனமாக உருப்பெறுகிறது. இந்த ஆதார நிறுவனத்திலிருந்து சேவை மனப்பான்மை மிக்க உறுப்பினர் தமக்குள் ஒன்றுசேர்ந்து தமது மக்களுக்கு சேவை புரிவதற்கென உருவாக்கும் நிலையங்களே சனசமூக நிலையங்களாகும். மனிதர் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் தோழமை கொள்வதற்கும், ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தமக்குள் நேரடித் தொடர்பைப் பேணுகின்ற சிறிய எண்ணிக்கையுள்ள உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பே சனசமூக நிலையங்களாகும். | ” |
சனசமூக நிலையங்கள் இலங்கையில் பொதுவாக பல ஊர்களில் அமைந்திருக்கின்றன.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.