சந்திரன் சுவர்க்கி

சந்திரன் சுவர்க்கி புகழேந்திப் புலவரைப் போற்றிய வள்ளல். இவன் மள்ளுவ நாட்டு அரசன். இவன் இப் புலவரைப் பேணிய செய்தியை இப் புலவர் தன் நளவெண்பா என்னும் நூலில் தொரிவிக்கிறார். அந்தப் பாடல்:

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட்(டு) எம் கோமான்
தண் தார் புனைச் சந்திரன் சுவர்க்கி – கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.[1]

வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார் என்று மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.[2]

அடிக்குறிப்பு

  1. நளவெண்பா 3:48
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13-ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 23
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.