ஜேம்ஸ் ராம்ஸ்போதம்
சாந்தசுவாமி என்ற தீட்சைப் பெயர் கொண்ட ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு (James Ramsbotham, 2nd Viscount Soulbury, மார்ச் 21, 1915 - திசம்பர் 12, 2004) என்பவர் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர்களில் ஒருவராவார். தன்னை அறியும் ஆர்வத்தாலே (Urge for Self-Realization) யோகசுவாமிகளை அண்டி வந்து உயர் ஞான சாதனை பயின்று உயர்நிலை அடைந்த ஞானி.
சாந்த சுவாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 21, 1915 இங்கிலாந்து |
இறப்பு | திசம்பர் 12, 2004 89) இங்கிலாந்து | (அகவை
வாழ்க்கைக் குறிப்பு
ஜேம்சு ராம்சுபோதத்தின் தந்தையார் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இறுதி ஆளுனராக இருந்த சோல்பரிப் பிரவு ஹேவால்ட் ராம்ஸ்போதம் ஆவார். இவரது தாயார் பெயர் டோறிஸ் டி ஸ்ரெயின் ராம்ஸ்போதம். ஜேம்சு 1915 ஆண்டு மார்சு 21 ஆம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். இளமையில் நல்லொழுக்கமுள்ள கிறித்தவராக வளர்ந்தார். ஈட்டன் கல்லூரியில் படிப்பை முடித்த ஜேம்சு, பின்னர் ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டெலன் கல்லூரியில் மெய்யியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இவர் ரீமீ என அழைக்கப்படும் ரோயல் மின்னியல் பொறிமுறை பொறியியலாளர் நிறுவனத்தில் பணியாற்றினார். 1949 ஏப்ரல் 5 இல் இவர் ஆந்தியா மார்கரெட் வில்ட்டன் என்பவரை திருமணம் புரிந்தார். ஆனாலும், மனைவி அடுத்த ஆண்டே 1950 சூன் 26 இல் காலமானார்.
வெளி இணைப்புகள்
- ஹன்சார்ட் 1803–2005: contributions in Parliament by the Viscount Soulbury