சத்யமேவ ஜெயதே (தொலைக்காட்சித் தொடர்)

சத்யமேவ ஜெயதே (Satyamev Jayate, தமிழில்: வாய்மையே வெல்லும்) ஒவ்வொரு ஞாயிறு காலையும் அனைத்து ஸ்டார் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஈ டிவி தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷனின் தேசிய மற்றும் அனைத்து மாநில அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் ஓர் இந்திய அரட்டை நிகழ்ச்சி யாகும். [1] நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆமிர் கான் இந்த தொலைக்காட்சித் தொடரை தயாரித்து வழங்குகிறார். இதுவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆமிர் கான் பங்கேற்கும் முதல் தொடராகும்.[2] இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் தடவையாக இந்தியில் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

சத்யமேவ ஜெயதே
வகை நிகழ்நிலை
வடிவம் அரட்டை நிகழ்ச்சி
தயாரிப்பு ஆமிர் கான்
இயக்கம் சத்தியஜித் பட்கல்
நடிப்பு ஆமிர் கான்
நாடு இந்தியா
மொழி
பருவங்கள் 1
இயல்கள் 4
தயாரிப்பு
தயாரிப்பு
ஒளிப்பதிவு சாந்தி பூசன் ராய்
படவி  பல படக்கருவி அமைப்பு
ஓட்டம்  60-65 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஆமிர் கான் தயாரிப்பு நிறுவனம்
ஒளிபரப்பு
அலைவரிசை ஸ்டார் இந்தியா பிணையம்
பட வடிவம்
முதல் ஒளிபரப்பு 6 மே 2012 (2012-05-06)
இறுதி ஒளிபரப்பு நடப்பு
புற இணைப்புகள்
வலைத்தளம்
தயாரிப்பாளர் வலைத்தளம்

இந்திய சமூகத்தில் நிலவும் சில அவலங்களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பற்றி விவரமாக தொகுத்தளிக்கும் சமூக விழிப்புணர்வுத் தொடராக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. முதல் வாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு – பெண் கருக் கொலை ; இரண்டாவது வாரம் – பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர் சிறுமியரின் நிலை ; மூன்றாவது வாரம் ( 20/05/2012 ) – வரதட்சிணை கொடுமை ; நான்காவது வாரத்தில் மருத்துவ முறைகேடுகள் ஆகும்.

இந்தத் தொடர் பொதுமக்களிடமிருந்தும் விமரிசகர்களிடமிருந்தும் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.