சதுர கிலோமீட்டர் அணி

சதுர கிலோமீட்டர் அணி (Square Kilometre Array - SKA) என்பது மொத்தம் அண்ணளவாக ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவு சேகரிக்கும் ஆற்றல் கொண்டதாக உருவாக்கப்படவிருக்கும் ஒரு வானொலித் தொலைநோக்கி ஆகும்[1]. இத்தொலைநோக்கி பரந்த வீச்சு அதிர்வெண்களில் தொழிற்படக்கூடியதாகவும், வேறு வானொலித் தொலைநோக்கிகளை விடவும் 50 மடங்கு அதிக உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும்[2]. அத்துடன் இது பத்தாயிரத்துக்கும் அதிகமான மடங்கு வேகமாக வானை ஆய்வு செய்யும் திறமையையும் கொண்டிருக்கும்.

சதுர கிலோமீட்டர் அணி
Square Kilometre Array (SKA)
ஓவியரின் பார்வையில் SKA அணியின் அன்டெனாக்கள்
அமைவுஆத்திரேலியா / நியூசிலாந்து / தென்னாப்பிரிக்கா
அமைக்கப்பட்ட காலம்கட்டம் 2019
கட்டம் 2 2024
கட்டம் 3 2022 முதல்
முதல் ஒளி2020 (திட்டம்)
தொலைநோக்கி வகை Phased array
சேர்க்கும் பரப்பு1,000,000 m²
இணையத்தளம்skatelescope.org

இந்த வானொலித் தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அமைக்கப்படவிருக்கின்றது. எமது விண்மீன் பேரடை, பால் வழி போன்றவை இந்த நாடுகளில் இருந்து தெளிவானவையாகக் காணப்படுவதனாலும், வானொலிக் குறுக்கீடுகள் இந்நாடுகளில் குறைவாகக் காணப்படுவதாலும் இதனை அமைப்பதற்கு ஏற்ற நாடுகளாக இவை தேர்ந்தெடுக்கப்பட்டன[3].

1.5 பில்லியன் யூரோக்கள் செலவில் அமைக்கப்படவிருக்கும் இந்தத் தொலைநோக்கியின் நிர்மாணப் பணிகள் 2015/16 ஆம் ஆண்டுகளில் ஆரம்பமாகி, முதலாவது அவதானிப்பு 2019 ஆம் ஆண்டளவில் இடமெறும். இதன் முழு அளவிலான பணிகள் 2024 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும்[4][5].

இத்திட்டத்தின் தலைமையகம் ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் நகரில் அமைந்திருக்கும்[6].

அமைப்பு

அண்டத்தின் தோற்றம் மற்றும் அதன் படிமுறை வளர்ச்சி பற்றிய அடிப்படைக் கெள்விகளுக்கு விடையறியும் பொருட்டு எஸ்கேஏ (SKA) என்ற இத்திட்டம் 20 நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டது[7]. 2011 ஏப்ரலில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஜோட்ரெல் கரை வானாய்வகம் இத்திட்டத்தின் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு[8], 2011 நவம்பரில் எஸ்கேஏ என்ற சுயாதீனமான, இலாப-நோக்கற்ற அமைப்பு நிறுவப்பட்டது[6].

As of மே 2012 இல், இந்த அமைப்பில் பின்வரும் நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன:[6]

  • ஆத்திரேலியா,
  • கனடா
  • சீனா
  • இத்தாலி
  • நியூசிலாந்து
  • தென்னாப்பிரிக்கா
  • நெதர்லாந்து
  • ஐக்கிய இராச்சியம்

மேற்கோள்கள்

  1. "Facts and figures". SKA Organisation. பார்த்த நாள் 26 மே 2012.
  2. , The Square Kilometre Array, p.24
  3. "Africa and Australasia to share Square Kilometre Array". BBC. 25 May 2012. http://www.bbc.co.uk/news/science-environment-18194984.
  4. "SKA announces Founding Board and selects Jodrell Bank Observatory to host Project Office". SKA Organisation (2 April 2011). பார்த்த நாள் 14 April 2011.
  5. "The project timeline". SKA Organisation. பார்த்த நாள் 14 April 2011.
  6. "The organisation". SKA Organisation. http://www.skatelescope.org/the-organisation/.
  7. Redfern, Martin (31 March 2011). "World's biggest radio telescope, Square Kilometre Array". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-12891215. பார்த்த நாள்: 2 April 2011.
  8. "Jodrell Bank chosen as base for largest radio telescope". BBC News. 2 April 2011. http://www.bbc.co.uk/news/science-environment-12947435. பார்த்த நாள்: 2 April 2011.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.