சட்டவியல் (சீன மெய்யியல்)

சட்டவியல் சீனாவின் போரிடும் நாடுகள் காலத்தில் (Warring States Period) உருவாகிய ஒரு அரசியல் மெய்யியல் பிரிவு ஆகும். அக்காலத்தில் உருவாகிய நான்கு முக்கிய மெய்யியல்களில் இதுவும் ஒன்றாகும்.

எல்லா மனிதர்களும் கெட்டவர்கள், ஒழுங்கைப் பேண அவர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பது இம்மெய்யியலின் சாரம்சம் ஆகும். அரசினதும், ஆட்சியாளர்களினதும் அதிகாரத்தை பலப்படுத்த உதவும் கொள்கையாக இது விளங்குகிறது. ஹான் ஃபெய் சி (Han Fei Zi), ஷாங் பிரவின் நூல் (The Book of Lord Shang) ஆகியவை இவ்வகை இம்மெய்யியலின் அடிப்படை நூல்கள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.