சகா (திரைப்படம்)

சகா திரைப்படம் இயக்குனர் திவ்வியராஜனின் இயக்கத்தில் கனடாவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். கனடாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தில் கே. எஸ். பாலச்சந்திரன் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

சகா
இயக்கம்வி. திவ்வியராஜன்
தயாரிப்புகவின் கலாலயா - ஜெயம் டிறீம் வேக்ஸ்
கதைவி. திவ்வியராஜன்
நடிப்புகே. எஸ். பாலச்சந்திரன்,
தர்ஷன் ,
கீர்த்தனன் ,
பாரத் ஜெயம்,
நவம்,
கனகலிங்கம் ,
ஆர். இராசரட்னம் ,
சிறீ முருகன்
ஒளிப்பதிவுஜீவன் ஜெயராம்
மொழிதமிழ்

வகை

உண்மைப்படம்

கதைச்சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நண்பர்களான மூன்று இளைஞர்களின் கதை. அன்பான தாத்தாவுடனும் (பாலச்சந்திரன்), விதவைத் தாயாருடனும் படிப்பும், விளையாட்டுமாக இருக்கும் ஒரு இளைஞன் (பாரத் ஜெயம்). கண்டிப்பான தாய், செல்லம் கொடுக்கும் தகப்பன் (நவம்) இணைந்த ஒரு குடும்பத்தின் மகன் (கீர்த்தனன்). இவர்களின் கல்லூரி நண்பனான இன்னுமொரு இளைஞன் (தர்ஷன்). இந்த மூவரும் தங்களோடு படிக்கும் சில மாணவர்களின் வழி நடத்தலுக்கு இரையாகிப் போவதுடன், ஈற்றில் ஏற்படும் வன்முறைக்கு, விதவைத் தாயின் மகன் அநியாயமாக பலியாகிறான். இந்தவகையான இளைஞர் வன்முறைகளால் ஏற்படும் மரணங்களுக்கு யாது காரணம், இவற்றை தடுக்க முடியாதா என்று தாத்தா கதறி அழுவதோடு திரைப்படம் முடிவடைகிறது.

குறிப்பு

கனடாவில் "நான்காவது பரிமாணம்" என்ற சிற்றிதழை வெளியிட்ட எழுத்தாளர் - நாடக இயக்குனர் க. நவரத்தினம் (நவம்) இத்திரைப்படத்தில் ஓர் இளைஞனின் தந்தையாக நடித்திருந்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.