ச. பெனடித்து

ச. பெனடித்து எனும் ஆசிநாதன் ஈழத்து ஓவியர். பென் என்ற புனைபெயரில் வரைந்தவர். முழுநேர ஓவியராக வாழ்ந்து வந்த இவர் வணிகமுறை ஓவியம் வரைவதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர். ஓவியர் மாற்கு வின் ஆசிரியர். இவர் வணிகமுறை ஓவியர்களாக இருந்த பலருக்கு ஓவியஆசிரியராக இருந்திருக்கிறார். மனிதஉருவரைகளையே பெரும்பாலும் வரைந்த இவர் ரேகைச் சித்திரங்களை வரைவதிலும் வல்லவர். கற்காலக் கலையுஞ் சுவையும் என்ற இவரால் எழுதப்பெற்ற நூல் 1959 இல் ஈழக்கலைமன்ற வெளியீடாக வெளிவந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

இவரது வாழ்க்கைக் குறிப்புகள் பற்றி எதுவும் அறியமுடியாததாகவே உள்ளது. ஓவியக்கலைக்கு யாழ்ப்பாணத்தவர் ஆதரவு தராதவர்கள் என்றும், ஓவியம் வரைதலை முழுநேரத் தொழிலாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வாழ முடியாதென்றும் மனம் நொந்தவர். தென்இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே காலமானார்.

ஓவியங்கள்

இவர் பெருந்தொகையான ஓவியங்களை வரைந்துள்ளார். அவைகள் பேணிப்பாதுகாக்கப்படாத காரணத்தால் அழிந்து போயின.

இவரது நூல்கள்

  • கற்காலக் கலையுஞ் சுவையும் - 1959

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.