கௌலவ் மாடு
கௌலவ் மாடுகள் (Gaolao) இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும். [1] இது இந்தியாவின் பொஸ் இன்டிகோ மாட்டினத்தின் ஒரு கிளை இனமாகும். இந்த மாடுகளை பால்தேவை மற்றும் உழைப்பு ஆகிய இரு பயன்களுக்காகவும் வளர்க்கின்றனர். இவை மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்டம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டம், சிந்த்வாரா மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நாந்துகாவ் மாவட்டம் ஆகிய பகுதிகளை பூர்வாகமாகக் கொண்டவை. இந்த மாடுகள் பெரியதாக மற்றும் கட்டுடல் கொண்டதாகவும் நிறத்தைப் பொருத்தவரை பொதுவாக சாம்பல் நிறம் வெள்ளை நிறம் ஆகிய நிறங்களைக் கொண்டவையாக உள்ளன. [2][3]
கௌலவ் காளை
கௌலவ் பசு
மேற்கோள்கள்
- "Breeds of Livestock - Gaolao Cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்த்த நாள் 15 May 2015.
- "A pair too rare". Down to Earth. பார்த்த நாள் 15 May 2015.
- "Gaolao". Dept. of Animal Husbandry, Maharashtra. பார்த்த நாள் 15 May 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.