கோபுசுத்தான் அரச ஒதுக்ககம்

கோபுசுத்தான் அரச ஒதுக்ககம் என்பது, அசர்பைசானின் தலைநகரமான பாக்குவில் இருந்து 64 கிலோமீட்டர்கள் (40 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு ஒதுக்ககம் (Reserve) ஆகும். இங்கு அமைந்துள்ள தொல்லியல் சிறப்பு மிக்க பாறை ஓவியங்கள், சேற்று எரிமலைகள், வளிமக் கற்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக இந்தப் பகுதி 1966 ஆம் ஆண்டில் அசர்பைசானின் தேசிய அடையாளச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கோபுசுத்தான் பாறை ஓவியப் பண்பாட்டு நிலத்தோற்றம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுiii
உசாத்துணை1076
UNESCO regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்
- ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2007 (31ஆவது தொடர்)
கிமு 10,000 ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்த கோபுசுத்தான் பாறை ஓவியங்கள்

கோபுசுத்தான் ஒதுக்ககம் பெருமளவு தொல்லியல் நினைவுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கே பண்டைக்கால மனிதரால் வரையப்பட்ட 600,000 க்கு மேற்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வோவியங்கள், மனிதர், விலங்குகள், போர், சடங்கு ஆட்டங்கள், காளைச் சண்டைகள், தோணிகள், போர்வீரர்கள், ஒட்டகங்களால் இழுக்கப்படும் வண்டிகள், சூரியன், சந்திரன், விண்மீன்கள் போன்றவற்றைக் காட்டுவனவாக உள்ளன. சராசரியாக இவை 5,000 தொடக்கம் 20,000 வரையான காலப் பகுதிகளைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளது.[1]

குறிப்புக்கள்

  1. http://www.ecotourism.aznet.org/naturalobjects/gobustan.html

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.