கோனம் பொஜ்ஜ

கோனம் பொஜ்ஜ என்பது இலங்கை வேடுவர்கள் அணியும் உடை, துணி வகைகளுக்கு கூறும் பெயராகும். தற்காலத்தில் ஆண் வேடுவர்கள் கோவனமும், பெண் வேடுவர்கள் துண்டுத், துணிகளையும் அணிவர். இதனையே கோனம் பொஜ்ஜ என்பர்.

வேடுவர்

புராதன மறைப்புக்கள்

வேடுவர்கள் இலங்கையில் புராதனக் குடிகளாகக் கருதப்படுகின்றனர். ஆரம்பகாலங்களில் இவர்கள் தனது அந்தரங்கப் பகுதிகளை மறைத்துக் கொள்வதற்காக இலைகள், சிறிய மரக் கிளைகள் போன்றவற்றை அணிந்ததாக வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய இலைகள், கிளைகளை காட்டில் காணப்படக்கூடிய ஒரு வித நார் கொண்டு கயிறு போல இடுப்பில் கட்டி அதனுள்ளே இந்த இலைகள், கிளைகளை சொருகிக் கொள்வார்கள்.

வேடுவக் கலாசாரத்துக்குட்பட்டவை.

வேடுவர்களின் வாழ்க்கை காடுகளிலே அமைந்திருந்தது. இந்த வேடுவர்கள் காடுகளில் இயற்கை வனமிக்க பிரதேசங்களில் சமூகமாக வாழத் தலைப்பட்டதும் இவர்களது வாழ்க்கை முறைகளில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வேடுவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது நடை, உடை, பாவனை, செயற்பாடுகள் வேடுவக் கலாசார உரிமைகளுக்குட்பட்டவையாகவே இருக்கின்றன.

தற்கால ஆண் வேடுவர்களின் துணிகள்

புராதன யுகத்தில் இருந்து வேடுவர்களைப் போலல்லாது தற்கால ஆண் வேடுவர்கள் துணிகள் அணிகின்றனர். ஆனால், கோவனமும் இடுப்பைச் சுற்றி அணியும் ஒரு துணித் துண்டுமாகும். வேடுவர்கள் தமக்குச் சொந்தமானதை உள்ளே வைத்துக் கட்டிக் கொள்ளும் இத்துணியை இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்வர்.

துணிப்பொதியில் உள்ளவை

வெற்றிலைப்பை, பாக்குவெட்டி, காசு மற்றும் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான பொருட்கள் இருப்பின் அவை அனைத்தும் இப்பொதியில் அடங்கும். கோவனம் அணியப்பயன்படும் கயிறு ஒரு வகை நாராலானதாகும்

கண்டங் கோடரி

கண்டங் கோடரி என்படும் ஒரு வகை தற்காப்பு ஆயுதம் எப்பொழுதும் ஆண் வேடுவர்களின் தோலில் இருக்கும். இது வேடுவக் கலாசார உரிமைகளுக்குட்பட்டவையாகும்.

பெடீ கோனம் பொஜ்ஜ

வயது முதிர்ந்த பெண்களும் சிறுமிகளும் உடலின் மேற்பகுதியை மறைப்பதில்லை. பிள்கைள் உள்ள சில தாய்மார்களும் உடலின் மேற்பகுதியை திறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், தற்போது வேடுவப் பெண்களும் தமது முழு உடலையும் மறையுமாறு உடை அணிகின்றனர்.

பெண்களின் உடைகளும் தற்காலத்தில் வித்தியாசமாகியுள்ளது. அது ஒரு துண்டு சீத்தைத் துணியாக மாறியுள்ளது. அதனை அவர்கள் 'பெடீ கோனம் பொஜ்ஜ' என்பார்கள். பெடீ என்பது பெண்களைக் குறிக்கும் வேடுவக் சொல்லாகும்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.