கோத்திரம்

கோத்திரம் (Gotra) என்பது குடும்பப் பெயர் போன்றதாகும்.[1] சிலருக்கு வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால்,பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் . வேதங்களின் படி ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர சகோதரிகளாவர்.[2]

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமயப்படி குற்றமாகும். கோத்திரம் என்ற சொல்லுக்கு பசு-எழுத்தாணி என்று பொருளாகும்.[3] அக்காலத்தில் பசுக்கள் ஒரு குடும்பத்தின் விலைமதிக்கமுடியாத சொத்தாக கருதியதால் குடும்பப் பெயர் என்ற சொல்லுக்கு கோத்திரம் என்ற பெயர் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கோத்திரம் என்மதை தமிழில் கூட்டம், குலவம்சம், பங்காளி வகையறா மற்றும் கிளை என்று சொல்வார்கள்.[4]

தமிழகத்தின் கொங்கு வேளாளர் மற்றும் செங்குந்தர் கைக்கோள முதலியார்[5] மத்தியில் நிலவும் கூட்டம் என்பதும், தமிழகத்தின் சிலபகுதிகளில் நிலவும் பங்காளி வகையறா என்பதும், நாட்டுகோட்டை செட்டியார் மத்தியில் நிலவும் ஒன்பது கோவில்கள் என்பதும் கோத்திரமே ஆகும். ஒரே கோத்திரத்தை(கூட்டம், பங்காளி வகையறா) சார்ந்த மக்கள் சகோதர உறவு முறை உடையவர்கள் என்பதால் அவர்களுக்குள் திருமண உறவு என்பது பெரும்பாலும் இருப்பதில்லை.

மேற்கோள்:

  1. Singer, edited by Milton; Cohn, Bernard S. (2007). Structure and change in Indian society (1. paperback printing ). New Brunswick, N.J.: AldineTransaction. பக். 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0202361383.
  2. Manusmriti:The Laws of Manu
  3. Singer, edited by Milton; Cohn, Bernard S. (2007). Structure and change in Indian society (1. paperback printing ). New Brunswick, N.J.: AldineTransaction. பக். 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0202361383.
  4. புலவர் இராசு.
  5. Sinopoli, Carla M. (2003). The Political Economy of Craft Production: Crafting Empire in South India, c.1350–1650. Cambridge University Press. பக். 187-188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139440745. https://books.google.co.uk/books?id=J3nHg-eKWuIC&pg=PA18.

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.