கோணேசர் கல்வெட்டு

கோணேசர் கல்வெட்டு ஒரு தமிழ் வரலாற்று நூல். திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் கவிராஜவரோதயரால் 16ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கொள்ளப்படுகிறது.

விவரம்

இலங்கையின் திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்ட மன்னன், இந்த ஆலயம் பற்றிய தகவல்களையும், அதன் நிர்வாக முறைகள், கோயில் பக்தர்களின் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி 'பெரியவளமை பத்ததி' என்னும் செப்பேட்டில் பதிவு செய்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த சாசன தகவல்களை அடிப்படையாக கொண்டு, கவிஞர் கவிராஜவரோதயரால் தொகுத்து வழங்கப்பட்டதே கோணேசர் கல்வெட்டு என அழைக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அவ்வாலயத்துக்கு குளக்கோட்டன் செய்த திருப்பணிகள், திருகோணமலை பற்றிய செய்திகள், அக்காலத்து திருகோணமலைச் சமூகத்தின் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் ஆகிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. கோயில் தொழும்பு செய்வோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ,அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், கோணேசர் ஆலயத்துக்குரிய திரவிய இருப்பு என்பன பற்றி விரிவாகச் இந்நூலில் உள்ளது. திருகோணமலையின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களில் இந்நூல் முக்கிய இடம்வகிக்கிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.