கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம்

கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ளது. கோச் பிகார், திசுட்டா ஆற்றின் கிளை ஆறான தோர்சா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மிகவும் குறிப்பிடத்தக்கதான கட்டிடம், கிபி 1887 ஆம் ஆண்டில் அரசர் நிரிப்பேந்திர நாராயனால் (Nripendra Narayan) கட்டப்பட்ட அரண்மனையாகும். இந்த அரண்மனையைப் பேணிப் பாதுகாப்பதற்காக 1982 ஆம் ஆண்டு, இதனை இந்திய தொல்லியல் ஆய்வகம் கையகப்படுத்தியது. இந்த அரண்மனையில் தற்போதுள்ள அருங்காட்சியகம் 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் கொல்கத்தா வட்டத்தாலும், மாநில அரசாலும் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் இக் கட்டிடத்தில் உள்ள ஏழு காட்சிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னர் தர்பார் மண்டபமாக இருந்த பகுதி இப்போது அருங்காட்சியகத்தில் தலைமைக் கூடமாக உள்ளது. முதலாம் காட்சிக்கூடமான இம்மண்டபத்தில் அரச சின்னம், அரசரின் முடிசூட்டு விழாவைக் காட்டும் ஓவியம், அரச குடும்பத்தினரின் நிழற்படங்கள் என்பவற்றோடு இவ்விடத்திற்கு அண்மையில் உள்ள பல இடங்களில் அகழ்வாய்வுகளின்போது கிடைத்த சில பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.