கொரநாட்டுக் கருப்பூர் சுந்தரேசுவரர் கோயில்

கொரநாட்டுக் கருப்பூர் சுந்தரேசுவரர் கோயில் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரநாட்டுக் கருப்பூர் என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இந்த சிவாலயத்தினை திருப்பாடலவனம் சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைப்பர். புராணக் காலத்தில் கொரநாட்டுக் கருப்பூர் என்ற இவ்வூர் திருப்பாடலவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இராஜகோபுரம்

அமைவிடம்

கும்பகோணம்- சென்னை சாலையில் கும்பகோணத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஊர் கருப்பூர் உள்ளது. கொரநாட்டுக்கருப்பூர் என்றும் அழைக்கப்படும் இவ்வூரில் தலவிருட்சமான பாதிரி மரங்கள் அதிகமாக இருந்ததால் திருப்பாடலவனம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. [1].

கோயில் அமைப்பு

கோயிலின் முகப்பில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கருவறையில் சிவலிங்கத்திருமேனியாக உள்ள இறைவன், கீழ்திசை நோக்கி உள்ளார். இறைவியின் சன்னிதி தென்திசை நோக்கி அமைந்துள்ளது. முதல் பிரகாரத்தில் வாகன மண்டபமும், மடப்பள்ளியும், திருமாளிகைப் பத்தியும், வடகிழக்கு ஈசானிய மூலையில் யாகசாலையும், தென் மேற்கில் கருவறையும் அமைந்துள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், சப்தமாதர்கள், லட்சுமி, துர்க்கை ஆகியோருடைய சிற்பங்கள் காணப்படுகின்றன. வடபுறத்தில் நடராஜர், பைரவர் மற்றும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். [1] கோயிலின் இடப்புறம் அபிராமி அம்மன் சன்னதி உள்ளது.

இறைவன், இறைவி

இத்தலத்தில் உள்ள இறைவன் சுந்தரேஸ்வரர், சுந்தரர், லோகசுந்தரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி அபிராமி ஆவார்.[1]. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்[2].

பெட்டி காளியம்மன் கோயில்

இக்கோயில் வளாகத்தில் மூலவர் கருவறைக்கு இடப்புறம் உள்ள பகுதியில் பெட்டி காளியம்மன் கோயில் என்றழைக்கப்படும் சுந்தரமகாகாளியின் சன்னதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கோயில்

இவ்வூரில் திறந்த நிலையில் உள்ள, லிங்கத்திருமேனியைக் கொண்ட அகத்தீசுவரர் கோயில் என்ற மற்றொரு சிவன் கோயில் உள்ளது. அக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். [3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. பக்தர்களைக் காக்கும் பெட்டி காளி, தினத்தந்தி, 8.7.2014
  2. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
  3. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.