கொன்ராடு அடேனார்
கொன்ராடு அடேனார் (Konrad Hermann Joseph Adenauer,5 ஜனவரி 1876–19 ஏப்ரல் 1967) ஓரு ஜெர்மானிய அரசியல்வல்லுநர். 1949 முதல் 1963 வரை மேற்கு செருமனியின் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி சீரழிந்து போனது. ஜெர்மனி மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என பிளவுப்பட்டு போனது. இதில் மேற்கு ஜெர்மனி வெகு சீக்கிரமாக தலைநிமிர்ந்தது. பொருளாதாரத்தில் தன்னை வலுபடுத்திக் கொண்டது. மேற்கு ஜெர்மனி விரைவாக பொருளாதார வளமிக்க நாடாக மாறுவதற்கு பெரும் காரணமாக விளங்கியவர் அடேனார் கொன்ராடு ஆவார்.
கொன்ராடு அடேனார் | |
---|---|
![]() | |
Konrad Adenauer in 1952 | |
Chancellor of Germany | |
பதவியில் 15 September 1949 – 16 October 1963 | |
முன்னவர் | Position established Allied military occupation, 1945–1949 Count Lutz Schwerin von Krosigk (1945) |
பின்வந்தவர் | Ludwig Erhard |
Foreign Minister of Germany | |
பதவியில் 15 March 1951 – 6 June 1955 | |
முன்னவர் | Count Lutz Schwerin von Krosigk (1945) |
பின்வந்தவர் | Heinrich von Brentano |
Mayor of Cologne | |
பதவியில் 1917–1933 | |
முன்னவர் | Ludwig Theodor Ferdinand Max Wallraf |
பின்வந்தவர் | Günter Riesen |
பதவியில் 1945–1945 | |
முன்னவர் | Robert Brandes |
பின்வந்தவர் | Willi Suth |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | Konrad Hermann Joseph Adenauer சனவரி 5, 1876 Cologne |
இறப்பு | 19 ஏப்ரல் 1967 91) Bad Honnef | (அகவை
அரசியல் கட்சி | Centre Party (1906–1945) CDU (1945–1967) |
வாழ்க்கை துணைவர்(கள்) | Emma Weyer Auguste (Gussie) Zinsser |
படித்த கல்வி நிறுவனங்கள் | University of Freiburg University of Munich University of Bonn |
பணி | Lawyer, Politician |
சமயம் | Roman Catholicism |
இளமை
கொன்ராடுஅடேனார் 1876 - ல் கோலோ நகரில் பிறந்தார். தந்தையார் கொன்ராடு ஒரு சட்டத்துறை எழுத்தர். இவர் ரோமன் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர். அடேனார் சட்டத்தையும், பொருளாதாரத்தையும் கற்றுத் தேர்ந்து கோலோன் நகரின் மாவட்ட நீதிமன்றத்தில் துணை நீதிபதியானார்.
அரசியல்
1906 - ல் கோலோன் நகரின் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1917 முதல் 1933 வரை மேயராகப் பதவி வகித்தார். நகரசபையோடு நில்லாமல் தேசிய அரசியலிலும் ஈடுபட்டார். கத்தோலிக்க மையக்கட்சியில் உறுப்பினராக சேர்ந்து 1917 முதல் 1933 வரை இரைன்லாந்து மாநிலச் சட்டமன்றத்தில் பணியாற்றினார். 1926 - ல் அடேனார் இலான்சிலிக்கல் கட்சியினரையும், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களையும் அரசியலில் இணைக்க வேண்டுமென வெளிப்படையாகப் பேசினார். இதனால் ஹிட்லரின் கோபத்துக்கு ஆளானார். 1933 - ல் ஹிட்லரின் ஆட்சியைச் சார்ந்தவர்கள் அடேனாரை ஜெர்மனிய மக்களுக்கு எதிராக குற்றம் செய்தவர் எனக்கூறி அனைத்து பதவிகளிலிருந்தும் விலக்கிவிட்டனர்.
பன்னிரெண்டு ஆண்டுகள் அரசியலிலிருந்து விலகியிருந்தார். 1944 - ஆம் ஆண்டின் இறுதியில் நாசிகள் இவரை அரசுக்கு எதிர்ப்பானவர்களை ஒதுக்கிவைக்கும் முகாம்களில் தள்ளி ஒதுக்கி வைத்தனர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்விற்றது. அமெரிக்கர்கள் 1945 - ல் அடேனாரைச் கோலோன் நகரின் மேயராக்கினர். கோலோன் நகர் ஆங்கிலேயர் வசப்பட்டபோது ஆங்கிலேயர் இவரது பதவியைப் பறித்தனர்.
கட்சி
அப்போது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் என்னும் அரசியல் கட்சி உருவானது. அதை உருவாக்கியவர்களில் அடேனாரும் ஒருவர். போரில் அழிவுற்ற ஜெர்மனியைச் சீராக்கப் பாடுபடுவதே அக்கட்சியின் நோக்கமாக இருந்தது. கிறிஸ்தவ சமய உயர்வை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடைய அக்கட்சியின் முயற்சியால் கிறிஸ்தவர்களிடையே நல்லிணக்கம் தோன்றியது.
அடேனாரின் எழுபதாவது வயதில் அவரது பெரும் அரசியல் வாழ்வு மீண்டும்துவங்கியது. விரைவில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரானார். அவரது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. இதனால் இவரது செல்வாக்கு உயர்ந்தது.
பதவியும் பணிகளும்
மேற்கு ஜெர்மனி மூன்று பகுதிகளாக இருந்தது. அவை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தன. இம்மூன்று பகுதிகளையும் இணைத்து மேற்கு ஜெர்மனி உருவானபோது அடேனார் அதன் தனிப்பெரும் தலைவராக உயர்ந்தார். 1948 - ல் பாராளுமன்றக் குழுவின் தலைவராக ஆனவுடன் ஜெர்மானியக் கூட்டாட்சி குடியரசுக்கான புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை வரையும் பணியில் ஈடுபட்டார். 1949 - ல் முதல் ஜெர்மானியக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தால் இவர் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையிலேயே மேற்கு ஜெர்மனி 1955 - ல் முழு விடுதலை பெற்றது. அந்நாடு வியத்தகு முறையில் பொருளாதார முன்னேற்றம் பெற்றது. 1953, 1957, 1961 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பெற்றார். 1963 அக்டோபர் திங்களில் அடேனார் தனது 87-ஆவது வயதில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
மறைவு
1967 -ல் ஏப்ரல் 19 அன்று அடேனார் மறைந்தார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தின் அதிபரான லின்டன் பி. ஜான்சன் உட்பட உலகின் பல தலைவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.