கொன்யா

கொன்யா (Konya, Turkish pronunciation: [ˈkon.ja]; கிரேக்கம்: Ἰκόνιον Ikónion, இலத்தீன்: Iconium) துருக்கியின் மத்திய அனத்தோலியா சமவெளியின் தென்மேற்கு விளிம்பிலுள்ள முதன்மையான நகரம். 2.1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் நாட்டின் ஏழாவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது.[1] கொன்யா மாகாணத்தின் தலைநகராக விளங்கும் இது பொருளியல் நிலையிலும் தொழில் வளர்ச்சியிலும் முன்னேறிய நகராக உள்ளது.[2][3][4]

கொன்யா
பெருநகராட்சி
துவக்கத்திலிருந்து: மெவ்லானா அருங்காட்சியகம், கொன்யா செலிமியே பள்ளி, அலாதீன் குன்று, இன்சு மினாரட் மெத்ரசே, மேரம் இயற்கைப் பூங்கா, ஆசிவெயிசடே பள்ளி, அலாதீன் நினைவகம், அதாதுர்க் அருங்காட்சியகம், தாசுகோப்ரூ

கொன்யா பெருநகராட்சியின் சின்னம்
கொன்யா
துருக்கியில் கொன்யாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°52′N 32°29′E
நாடு துருக்கி
துருக்கிய வலயம்மத்திய அனத்தோலியா
மாகாணம்கொன்யா
அரசு
  நகரத்தந்தைதாகிர் அக்யூரெக் (ஏகேபி)
பரப்பளவு
  மொத்தம்38,873
ஏற்றம்1,016
மக்கள்தொகை (2016)[1]
  மொத்தம்21,61,303
  அடர்த்தி56
நேர வலயம்தொலை கி. ஐ.நே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு42XXX
தொலைபேசி குறியீடு(+90) 332
தானுந்து உரிம எண்42
இணையதளம்www.konya.bel.tr
அரசுத்தளம்: www.konya.gov.tr

துருக்கிய தொல்குடியினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் கொன்யா 1077–1308 காலகட்டத்தில் செல்யூக் மரபின் இரம் சுல்தான்களின் தலைநகராகவும் 13ஆவது நூற்றாண்டிலிருந்து 1487 வரை கரமனிதுகளின் தலைநகராகவும் இருந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Turkey: Major cities and provinces". citypopulation.de. பார்த்த நாள் 2015-02-08.
  2. Financial Times: Reports — Anatolian tigers: Regions prove plentiful
  3. root. "Anatolian Tigers". Investopedia. பார்த்த நாள் 25 May 2015.
  4. "Zaman: Anatolian tigers conquering the world". மூல முகவரியிலிருந்து 2013-08-21 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.