கொட்டில்
கொட்டில் என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் வேளாண்மைக் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது கால்நடை மற்றும் குதிரை முதலான விலங்கு வளர்ப்பு, கருவிகள், தீவனம் ஆகியவற்றை பராமரிக்கும் இடமாகும்.[2] மக்களை தங்கவைக்கும் இடமும் கொட்டில் எனும் பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இதன் அடிப்படையில் கொட்டில் எனும் சொல், புகையிலை கொட்டில், பசு மாட்டுக் கொட்டில், ஆட்டுக் கொட்டில், என வழங்கப்படுகின்றது.


வரலாறு
தற்கால கொட்டில்கள் பெரும்பாலும் மூன்று இடைகளிகளாலான இடையுகத்தில் உருவாக்கப்பட்டவை. இவை பன்னசாலைகள் எனப்பட்டன. இது படிப்படியாக 12ஆம் நூற்றாண்டு கட்டிடக் கலை மரபினுள் புகுந்தது. பின்னர் மண்டபங்கள் மற்றும் திருச்சபைகள் அமைப்பதில் பிரயோகிக்கப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில் பல்லாயிரக் கணக்கான பாரிய கொட்டில்கள் மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்டன. காலப்போக்கில் இந்த கட்டிட முறைமை பண்ணைகள் மற்றும் கிராமிய எளிய கட்டிடங்களில் பின்பற்றப்பட்டன. இடைகளி கொட்டில்கள் பெரிய நுளைவாயிலையும், தாழ்வாரத்தையும் கொண்டது.[3]
தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் இத்தகைய கொட்டில்கள் இருந்தமையை பட்டினப்பாலை எனும் பத்துப் பாட்டு பாடல்கள் [4] மூலம் அறிய முடிகின்றது. அவை கரும்பில் இருந்து சாறு காய்ச்சும் கொட்டில்களாக கூறப்படுகின்றது
கொட்டில்களின் முக்கிய வகைகள்: பாரிய கொட்டில்கள்-பக்கமாக வெளியைக் கொண்டவை, செறிவாக கொட்டகை- நடுவிலே வாயிலைக் கொண்டது, சிறிய கொட்டகை- மாறும் வெளியைக் கொண்டது. பின் கூறப்பட்ட வகை கிழக்கு ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படுகின்றது.கற்சுவர்கள் பிரயோகிக்கப்பட்டதும் கொட்டில்களின் பயன்பாடு வளக்கொழிந்து போயிற்று.
கட்டுமானம்
ஐக்கிய அமெரிக்காவில் பண்டைய கொட்டில்கள் பண்ணையில் வெட்டப்பட்ட மரங்களினால் அமைக்கப்பட்டன. கற்களால் ஆன கொட்டில்கள் கற்கள் மலிவாகக் கிடைக்கும் இடங்களில் ஆக்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இறுதிப் பகுதியில் மரச் சட்டகங்களுக்குப் பதிலாக வளை, கைமரம், குறுக்குவளை என்பன அறிமுகமானதால் மரத்தின் தேவை குறைந்தது.[5] மரங்களின் பொருத்துக்கள் செய்வதற்கு பொருத்துமுளைகளுக்குப் பதிலாக ஆணிகள் பயன்பட்டன. பண்ணைகள் இயந்திரமயப்பட்டமை, போக்குவரத்து உட்கட்டமைப்பு விருத்தி, புதிய தொழில்நுட்பம் ஆகியவை காரணமாக கொட்டில்களின் வாயில்கள் அகலமாயின. பைஞ்சுதைப் பாளங்கள் 20 ஆம் நூற்றாண்டில் பெரிதும் பயன்பாட்டிற்கு வந்தன.[6]
நவீன கொட்டில்கள் உருக்கினால் அமைக்கப்படுகின்றன. 1900 முதல் 1940 வரை, பல பாரிய பால் பண்ணைக் கொட்டில்கள் இவ்வாறு அமைக்கப்பட்டன. இவை அதிகளவு வைக்கோலைச் சேமிக்கும் வகையில் சரிவு மாறு கூரைகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. இதுவே பின்னாளில் பண்ணைக் கொட்டில்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவம் ஆகியது.
பயன்கள்
பழைய வட அமெரிக்க கொட்டில்களில் மேல் தளம் வைக்கோல், தானியம் என்பவற்றைச் சேமிக்க பயன்பட்டது. மேலே திறந்த நிலையிலும் வைக்கோல் பரண்கள் அமைக்கப்படுவதுண்டு. சிறைப்படுத்தும் கதவினூடாக படிப்படியாக கீழிற்ங்கும் வைக்கோல் விலங்குகளால் உண்ணப்படும்.
இங்கிலாந்தில் பண்ணை வீட்டுக்கு அருகில் கொட்டில்கள் அமைக்கப்படுவது போதுவாக காணப்படும். வேலையாட்கள் ஓய்வெடுப்பதற்கு இது பயன்படும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் இத்தகைய பண்ணையை ஒட்டிய ஓய்வெடுக்கும் கொட்டில்கள் மற்றும் அறுவடைகளை சேமிக்கும் கொட்டில்களை காணலாம்.[7]
சமூக ஒன்றுகூடல்களுக்கும் கொட்டிகள் பயன்பட்டு வந்துள்ளன. சினிமா, நாடகக் கொட்டில்கள் இத்தகையவை.
மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவதற்கும் கொட்டில்கள் பயன்படுகின்றன.[8]
மேற்கோள்கள்
- Oxford English Dictionary Second Edition on CD-ROM (v. 4.0) © Oxford University Press 2009. Threshold.
- Allen G. Noble, Traditional Buildings: A Global Survey of Structural Forms and Cultural Functions (New York: Tauris, 2007), 30.
- Malcolm Kirk, The Barn. Silent Spaces, London 1994; Graham Hughes, Barns of Rural Britain, London 1985; Walter Horn, 'On the Origins of the Medieval Bay System', in: Journal of the Society of Architectural Historians 17 (1958), nr. 2, p. 2-23.
- https://ta.wikisource.org/s/5r8t
- Shawver, John L... Plank frame barn construction.. New York: D. Williams, 1904.. https://books.google.com/books?id=M7swAQAAMAAJ.
- Fink, Daniel. Barns of the Genesee country, 1790–1915: including an account of settlement and changes in agricultural practices. Geneseo, N.Y.: J. Brunner, 1987. Print.
- "வெங்காயச் செய்கையாளர்களுக்கு கொட்டில்கள்".
- "இரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேற்றம்".