கொங்கிராடு

கொங்கிராடு (மொங்கோலியம்: Хонгирад) என்பது மங்கோலியப் பழங்குடியினரில் ஒரு பிரிவு ஆகும். இவர்களது பகுதியானது சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்தின் ஹுலுன் ஏரி மற்றும் மங்கோலியாவின் கால்கா நதி ஆகியவற்றுக்கு அருகில் அமைந்திருந்தது.[1][2] இங்கிருந்தபடி இவர்கள் ஆளும் வட சீன அரசுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். பல்வேறு கொங்கிராடு இனங்கள் ஒரே தலைவரின் கீழ் ஒன்றிணையாமலேயே இருந்தன. இதனால் இவர்களால் ஒரு இராணுவ சக்தியாக உருவாக முடியவில்லை.

மங்கோலியப் பேரரசு கி.பி. 1207, கொங்கிராடு மற்றும் அண்டை இனங்கள்

குறிப்புக்கள்

  1. Хонгирад аймаг mongol.undesten.mn (Mongolian)
  2. M. Sanjdorj, History of the Mongolian People's Republic, Volume I, 1966

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.