கையொப்பம்

ஒரு கையொப்பம் என்பது கையால் எழுதப்பட்ட ஒருவரது பெயரை அல்லது புனைப்பெயரை காண்பிப்பது ஆகும். இது குறிப்பிட்ட நபர் எழுதும் ஆவணங்களில் அடையாளம் மற்றும் ஆதார நோக்கத்திற்காக தரப்படுகிறது. இவ்வாறு கையொழுத்து இட்டவரை ஆவணங்கள் ஒப்பமிட்டவர் எனக் குறிக்கின்றன. யாரால் உருவாக்கப்பட்டது என்று அவரது கையொப்பத்துடன் காணப்படும் படைப்புகள் கையொப்பப் படைப்பு எனப்படுகிறது. பொதுமக்களுடன் தொடர்புள்ள சிறப்பு நபர்களின் கையெழுத்தைப் பெற்று சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக உள்ளது. இவ்வாறு இடப்படும் கையெழுத்து சட்டப்படி செல்லும் கையெழுத்து போலன்றி கலைநயத்துடன் அமைந்திருக்கும்.

மகாத்மா காந்தி இன் கையொப்பம்

கையெழுத்தின் வகைகளும் பயன்பாடுகளும்

கையெழுத்தொன்றின் வழமையான பயன்பாடு சட்டச்சான்று உரைப்பதாக உள்ளது: இதன்மூலம்

  1. ஆவணத் தோற்றம் (அடையாளம்) --யார் உருவாக்கியது
  2. ஆவண படைப்பாளியின் எண்ணம் (நோக்கம்) -- ஏன்

ஆகியவற்றிற்கு சான்று பகர்கின்றது. எடுத்துக்காட்டாக, பல ஒப்பந்தப் புள்ளிகளில் கையொப்பம் ஒப்பந்தக்காரரின் அடையாளத்தை மட்டுமல்லாது ஒப்புக்கொள்ளப்பட்ட விவரங்களுக்கும் நன்கு அறிந்து ஒப்புதல் தெரிவித்தமைக்கும் சான்றாக உள்ளது.

பல நாடுகளில் கூடுதல் சட்டநிலையாக சான்றுறுதி வழக்கறிஞர் முன்னிலையில் கையொப்பம் பதிவது வழக்கத்தில் உள்ளது. எழுத்தறிவில்லாதவர்கள் தங்கள் இடதுகை பெருவிரல் ரேகையை, கை நாட்டு, கையொப்பத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தவும் சில நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.