கைபர் கணவாய்

கைபர் கணவாய் (Khyber Pass) 1,070 மீ அல்லது 3.510 அடி உயரத்தில் ஸ்பின் கர் மலைகளின் வடகிழக்கு பகுதி வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளை இணைக்கும் ஒரு மலைவழிக் கணவாய் ஆகும். இது உலகின் பழமையான சாலைகளில் ஒன்றாகும். வரலாறு முழுவதும் கைபர் கணவாய்க்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. ஒருங்கிணைந்த பண்டைய பட்டு சாலை அதன் பாதையில் கைபர் கணவாயையும் கொண்டதாகும். மேலும் மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கு மத்தியில் கைபர் கணவாய் ஒரு முக்கியமான வர்த்தக பாதையாக பயன்படுத்தப்பட்டது. இந்த இடம் ஒரு முக்கியமான இராணுவத்தளமாகவும் திகழ்ந்து வருகிறது. கணவாயின் சிகரம் பாகிஸ்தான் உள்ளே 5 கிலோமீட்டர் (3.1 மைல்)வரையில் 'லண்டி கொட்டல்' என்னும் இடம் வரை அமைந்து உள்ளது.

கைபர் கணவாய்
கைபர் கணவாய்
ஏற்றம்1,070 மீ (3,510 அடி)
அமைவிடம்ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான்
மலைத் தொடர்ஸ்பின் கர்
ஆள்கூறுகள்34.093°N 71.144°E / 34.093; 71.144
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.