கைக்கோ
கைக்கோ (Kaikō) என்பது, ஆழ்கடலில் இயங்கக்கூடிய தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலம் ஆகும். இது ஜாம்ஸ்டெக் (JAMSTEC) என்னும் சப்பானிய நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்டது. இது உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியிலுள்ள சலஞ்சர் ஆழம் என்பதன் தளத்தில் இறங்கி அங்கிருந்து பக்டீரியா மாதிரிகளையும் எடுத்து வந்தது. 1996 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் 10,897 மீட்டர் ஆழத்தை எட்டிய இக் கலமே மிகக்கூடிய ஆழத்துக்கு நீர்மூழ்கிய ஆளில்லாக் கலம் என்ற பெருமையைப் பெற்றது. 2003 மே மாதத்தில் சான்-ஒம் சூறாவளியின்போது இதனை மேற்பரப்புடன் இணைத்த கம்பிவடம் அறுந்ததனால் கடலுள் அமிழ்ந்து காணாமற் போய்விட்டது.
வெளியிணைப்புக்கள்
- ஜாம்ஸ்டெக்கின் கைக்கோ பக்கம் (ஆங்கில மொழியில்)
- டையரமெரிக்கா.நெட் (ஆங்கில மொழியில்)
- சிமாட்டர்சயன்சு.நெட் (ஆங்கில மொழியில்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.