கேரி லாம்

கேரி லாம் (Carrie Lam Cheng Yuet-ngor), (பிறப்பு:13 மே 1957), சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றான ஆங்காங்கின் அரசியல்வாதியும், ஆங்காங்கின் நான்காவதும், 2017-ஆம் ஆண்டு முதல் நடப்பு தலைமை நிர்வாகியாகவும் இருக்கும் பெண்மணியாவார்.[1] கேரி லோம் 2012 முதல் 2017 முடிய ஆங்காங் பிரதேசத்தின் தலைமைச் செயலாராகவும், 2007 முதல் 2012 முடிய ஆங்காங் பிரதேச வளர்ச்சி செயலாளாராகவும் பணியாற்றியவர்.

கேரி லாம்

பிரித்தானிய ஆங்காங் ஆட்சியின் போது, கேரி லோம், ஆங்காங் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து, பிரித்தானிய ஆங்காங் அரசில் குடிமைப் பணி அதிகாரியாக 1980-இல் பணியில் சேர்ந்தார்.

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவுக்கான எதிர்ப்புகள்

சீனாவிற்கு நாடு கடத்தும் சட்ட மசோதவிற்கு 20 இலட்சம் ஆங்காங் இளைஞர்கள் 9 சூன் 2019 அன்று சாலைகளில் நடத்திய போராட்டங்கள்
ஆள்தூக்கி சட்டத்திற்கு எதிரான ஆங்காங் இளைஞர்கள் போராட்டம், 9 சூன் 2019

மே 2019-இல் சீனாவின் சிறப்பு பிராந்தியமான ஆங்காங் பிரதேசத்தில், சீனாவிற்கு எதிரான குற்றவழக்கில் ஈடுபட்டவர்களை, சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற ஆங்காங் பிரதேசத்தின் தலைமை நிர்வாகி கேரி லாம் கொண்டு வந்த தப்பியோடிய குற்றவாளிகள் மற்றும் குற்றவியல் சட்டத்தில் பரஸ்பர உதவி சட்ட முன்வடிவை[2] எதிர்த்து, இருபது இலட்சம் ஆங்காங் இளைஞர்கள் கடுமையான போராட்டத்தை வாரக்கணக்கில் நடத்தினர்.[3][4] காவல்துறையினர் இப்போராட்டத்தை புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கட்டுக்குள் கொண்டு வர முயன்றும் தோல்வியில் முடிந்தது. இதனால் கேர் லோம், மேற்படி சட்ட முன்வடிவை நிறுத்தி வைத்தார்.[5][6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.