கேப் யோர்க் தீபகற்பம்
கேப் யோர்க் தீபகற்பம் (Cape York Peninsula) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தூர வடக்கில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். தனிமைப்படுத்தப்ப்பட்ட இத்தீபகற்பம் பூமியில் எஞ்சியுள்ள ஒருசில காட்டுப்பிரதேசங்களில் ஒன்றாகும்[1]. இதன் மாசடையா வெப்பவலய மழைக்காட்டுகள் உலக காலநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது[2]. உலக பாரம்பரியக் களமாக இதனை அறிவிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது[3].

கேப் யோர் தீபகற்பம் கிட்டத்தட்ட 137,000 கிமீ² பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள் தொகை 18,000 ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் ஆஸ்திரேலிய பழங்குடிகளும், டொரெஸ் நீரிணைத் தீவு மக்களும் ஆவர்[4].
இத்தீபகற்பத்தின் மிக உயரமான இடம் "கேப் யோர்க்" ஆகும். கப்டன் ஜேம்ஸ் குக் இப்பெயரை இவ்விடத்திற்கு 1770 ஆம் ஆண்டில் சூட்டினார். மிக உயரமான இடத்தில் இருந்து 160 கிமீ தூரத்தில் டொரெஸ் நீரிணையை அடுத்து நியூ கினி அமைந்துள்ளது. இதன் மேற்குப்புற எல்லையில் கார்ப்பெண்டாரியா குடாவும், கிழக்கே கோரல் கடலும் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
- Mittermeier, R.E. et al. (2002). Wilderness: Earth’s last wild places. Mexico City: Agrupación Sierra Madre, S.C.
- Mackey, B. G., Nix, H., & Hitchcock, P. (2001). The natural heritage significance of Cape York Peninsula. Retrieved January 15, 2008, from http://www.epa.qld.gov.au/register/p00582aj.pdf.
- Compiling a case for world heritage on Cape York Peninsula
- Cape York Peninsula Development Association. Homepage