கேடய எரிமலை
முழுக்க முழுக்க எறி கற்குழம்பால் ஆன ஒரு எரிமலை வகையே கேடய எரிமலை எனப்படும். இதன் அதிக பரப்பிற்கு சமமில்லாமல் குறைந்த உயர்த்துடன் காணப்படுவதால் இது கேடயத்தைப் போலக் காணப்படுகிறது. இது அகலமான எறிகற்குழம்புப் படையால் ஆனது. இதில் உள்ள கற்குழம்பு பிசுபிசுப்புத் தன்மை குறைந்தது. ஹவாயில் உள்ள எரிமலைகள் இதற்குச் சிறந்த உதாரணங்கள் ஆகும்.

எறிகற்குழம்பு அடுக்குகளைக் காட்டும் படம்

கேடய எரிமலை வெடிப்பு. (எண்களின் குறிப்பு: 1. சாம்பல் முகில் 2. எறிகற்குழம்பின் ஊற்று 3. எரிமலைப் பள்ளம் 4. எறிகற்குழம்பு ஏரி 5. நீராவித் துளை 6. எறி கற்குழம்பு 7. எறி கற்குழம்பு மற்றும் சாம்பல்ப் படைகள் 8. அடுக்கு 9. அடிப் பகுதி 10. கற்குழம்புக் குழாய் 11. மாக்மா அறை 12. அணை(புவியியல்) Hawaiian Eruption-numbers.svg.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.