கோலாலம்பூர் கோபுரம்

கோலாலம்பூர் கோபுரம் (மலாய்: Menara Kuala Lumpur; சுருக்கமாக கேஎல் கோபுரம்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உயரமான கோபுரக் கட்டிடமாகும். இதன் கட்டுமானம் 1995இல் முடிவடைந்தது. இது தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்காக கட்டப்பட்டது. தொலைத்தொடர்பிற்கான வானலை வாங்கிகள் 421 மீ (1,381 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. இவற்றின் இலத்திரனியல் கருவிகள் கொண்டுள்ள கட்டிடத்தொகுதியின் உயரம் 335 மீ (1,099 அடி)யில் உள்ளது. இதன் கீழுள்ள கோபுரம் நேரடிக் கிணறு போல அமைந்துள்ளது. உணவருந்திக் கொண்டே நகரின் எழில்மிகு காட்சியைக் கண்டு களிக்க உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றும் உணவகம் உள்ளது. இதற்குச் செல்ல உயர்த்தி ஒன்று உள்ளது.

கோலாலம்பூர் கோபுரம்
吉隆坡塔
மெனாரா கோலாலம்பூர்
இரவில் கோலாலம்பூர் கோபுரம்
பொதுவான தகவல்கள்
வகைதொலைத்தொடர்பு, இசுலாமிய பிறை வானோக்கு நிலையம், துணிவுச்செயல் (வான் குதித்தல்), சுற்றுலா, பண்பாடு
இடம்கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°9′10″N 101°42′12″E
கட்டுமான ஆரம்பம்1991
நிறைவுற்றது1995[1]
ஆரம்பம்1 அக்டோபர் 1996
உயரம்
Antenna spire421 m (1,381 ft)
கூரை335 m (1,099 ft)
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை6
தளப்பரப்பு7,700 m2 (82,882 sq ft)
உயர்த்திகள்4
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்கும்புலன் செனிரேகா Sdn. Bhd.
மேற்கோள்கள்
[2][3]

படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் செல்வதற்கு ஆண்டுதோறும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கோபுரம் இசுலாமிய மாதங்களைக் குறிக்கும் நிலவின் பிறைகளைக் காணவும் வானோக்கியாக பயன்படுகிறது. பொதுமக்கள் சென்று காணக்கூடிய மிக உயர்ந்த காட்சிமுனையாக இது விளங்குகிறது. மேலும் இந்தக் கோபுரம் கோலாலம்பூரின் வான்வெளியை அடையாளப்படுத்தும் சின்னமாக பெட்ரோனாஸ் கோபுரங்களுடன் போட்டியிடுகிறது.

மேற்கோள்கள்

  1. Architecture & Technical Data. (n.d.). Menarakl.com.my. http://www.menarakl.com.my/index.cfm?sc=31 Retrieved in 19th October 2010.
  2. கோலாலம்பூர் கோபுரம் at SkyscraperPage
  3. கோலாலம்பூர் கோபுரம் at Emporis

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.