க. வீரகத்தி
பண்டிதர் க. வீரகத்தி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கரவெட்டி கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட தங்கக் கடையல் என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றனார் செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர்.
தமிழ் இலக்கணப் போதனை
தனது வாணி கலைக் கழகம் என்ற கல்விச்சாலை ஊடாக ஏராளமான மாணவர்க்கு, தமிழ் இலக்கியமும், இலக்கணமும் போதித்தவர். யாழ்ப்பாண பல்கலைகழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா இவரது மாணாக்கராவார்,
பெற்ற பரிசில்கள்
- 1968ல் திருநெல்வேலி சைவ சித்தந்த கழகம் நடாத்திய திருவள்ளுவர் தினப்போட்டியில் “பரி உரையில் இலக்கணகுறிப்புகள்" எனும் இவரது கட்டுரை பரிசு பெற்றது.
இவர் எழுதிய நூல்கள்
- கதிரைமலைப்பள்ளு நாடகம் (நாடகம், 1962) வாணி கலைக்கழகம், கரவெட்டி
- கண்ணிற் காக்கும் காவலன் (கவிதைகள், 1965) வாணி கலைக்கழகம், கரவெட்டி
- செழுங்கமலச் சிலம்பொலி (சமயப் பாடல்கள், 1970) வாணி கலைக்கழகம் கரவெட்டி
- கருகம்பனை அருள்மிகு நாக இராஜராஜேஸ்வரி சதகம் – காந்தளகம் வெளியீடு (1988)
- இலக்கண விதிமூகங்களும் விதிகளும் –திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த கழக வெளியீடு (1984)
- இலக்கணவிளக்கம் – (1968)
- கடலும் படகும் – இலங்கை வானொலியில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு (1971)- இலங்கை பண்டிதர் கழக வெளியீடு
- தங்கக் கடையல் ‘குழந்தைபாடல்கள் – (இரண்டாவது பதிப்பு) எம்.டி.குணசேன நிறுவன வெளியீடு (1971)
மேற்கோள்கள்
- இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், கோப்பாய் சிவம்
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.