கே. எல். வி. வசந்தா
கே. எல். வி. வசந்தா (1923 - 2008) என்பவர் தமிழகத் திரைப்பட நடிகையாவார். இவர் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பர்மா ராணி படத்தில் 1945
இவர் 1923 ஆம் ஆண்டு குன்றத்தூரில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே வாய்ப்பாட்டு, நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பிற்காலத்தில் நடிகையானபோது தனது வேடங்களுக்கான பாடல்களை அவரே சொந்தமாக பாடி நடித்தார். இவர் 1934 இல் பவளக்கொடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 1939-ல் வெளியாகிய வெற்றிப்படமான ரம்பையின் காதல் படத்தின் கதாநாயகியாகப் புகழ்பெற்றார்.[1]
நடித்தப் படங்கள்
- பவளக்கொடி, 1934
- ரம்பையின் காதல், 1939
- மதன காமராஜன், 1941 பிரேமவள்ளி
- நந்தனார், 1942
- ராஜ ராஜேஸ்வரி, 1944
- பர்மா ராணி, 1945
- சுபத்ரா
- சித்ரா
- சுலோச்சனா 1946
- சாலி வாஹனன்
மேற்கோள்கள்
- பிரதீப் மாதவன் (2017 அக்டோபர் 13). "எஸ்.எஸ்.வாசனின் முதல் தெரிவு!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 13 அக்டோபர் 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.