கெமர் மக்கள்

கெமர் மக்கள் (Khmer people) எனப்படுவோர் கம்போடியாவில் பெரும்பான்மையாக வாழும் ஓர் இனக்குழுவாகும். நாட்டின் 13.9 மில்லியன் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கெமர் மக்கள் ஆவர். தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் மொன்-கெமர்களில் ஒரு பிரிவினரான இவர்கள் கெமர் மொழியைப் பேசுகின்றனர். பெரும்பான்மையான கெமர் மக்கள் கெமர் வழிவந்த பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இது தேரவாத பௌத்தம், இந்து சமயம், ஆவியுலகக் கோட்பாடு போன்றவற்றின் ஒரு கலப்பாகும்[2]. கணிசமான கெமர் மக்கள் தாய்லாந்து (வடக்கு கெமர்), வியட்நாமின் மெக்கொங் டெல்ட்டா (கெமர் குரோம்) பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

கெமர்
Khmer
மொத்த மக்கள்தொகை: 15 மில்லியன் (2006)
அதிக மக்கள் உள்ள இடம்:  கம்போடியா
  • 12.5 மில்லியன்[1]

 வியட்நாம்

  • 1.7 மில்லியன்

 தாய்லாந்து

  • 1.4 மில்லியன்

 ஐக்கிய அமெரிக்கா

  • 200,000

 பிரான்சு

  • 50,000

 கனடா

  • 25,000

 ஆத்திரேலியா

  • 20,000

 மலேசியா

  • 11,381

 நியூசிலாந்து

  • 5,000

 லாவோஸ்

  • 4,000

 பெல்ஜியம்

  • 3,000
மொழி: கெமர், வியட்நாமியம், வடக்கு கெமர், தாய்
சமயம்/சமயம் அற்றோர்: தேரவாத பௌத்தம்
தொடர்புடைய இனக்குழுக்கள்: மொன், வா, மற்றும் வேறு மொன்-கெமர் பிரிவுகள்

வரலாறு

கெமர் மக்கள் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து இங்கு வந்து குடியேறியதாக நம்பப்படுகிறது. வடக்கில் சீன - திபெத்தியர்களால் இவர்கள் வடக்கில் இருந்து விரட்டப்பட்டவர்களாக அல்லது விவசாயத்துக்காக இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென்கிழக்காசியாவ்வில் இவர்களின் குடியேற்றத்திற்குப் பின்னர் இவர்களின் வரலாறு கம்போடியாவின் வரலாற்றுக் காலக்கோட்டுடன் இணைந்து போகிறது. தென்கிழ்க்காசீயாவின் மற்றையா இன மக்களான பியூ, மற்றும் மொன் மக்கள் போன்று கெமர் மக்களும் இந்திய வர்த்தகர்களினாலும் அறிவாளிகளினாலும் கவரப்பட்டு, அவர்களின் வாழ்க்கை முறை, மற்றும் சைவ சமயம் போன்றவற்றைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

மேற்கோள்கள்

  1. CIA FactBook. Accessed July 25, 2006.
  2. Faith Traditions in Cambodia; pg. 8; accessed August 21, 2006

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.