கெ. ஆர். மீரா
கெ.ஆர். மீரா (பிறப்பு 19 பிப்ரவரி 1970) புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய ’ஆவே மரிய’ என்ற மலையாளச் சிறுகதை 2009-ஆம் ஆண்டு ’கேரள சாகித்ய அகாதமி விருது’ பெற்றுள்ளது[1]. நான்கு சின்னத்திரை தொடர்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ள கெ.ஆர். மீரா தேசிய விருது பெற்ற ’ஒரே கடல்’ என்ற திரைப்படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.
கெ. ஆர். மீரா | |
---|---|
புனைப்பெயர் | மீரா |
தொழில் | புதினம், சிறுகதை மற்றும் திரைக்கதை ஆசிரியர், இதழாளர் |
நாடு | இந்தியா |
இலக்கிய வகை | புதினம், சிறுகதை |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
கேரள சாகித்திய அகாதமி விருது |
துணைவர்(கள்) | திலீப் |
பிள்ளைகள் | சுருதி திலீப் |
வாழ்க்கைக் குறிப்பு
கெ.ஆர். மீரா 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம்கோட்டை என்னும் ஊரில் பிறந்தார். மலையாள மனோரமாவில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த கெ.ஆர். மீரா, பிறகு எழுத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக அந்த பதவியைப் பணித்துறப்பு செய்தார்.
இவரது சிறுகதைகளுள் பல தமிழில் கே.வி. ஷைலஜா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி புக்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.[2].
தென்னிந்திய மொழிகளில் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்பில் இவர் எழுதிய [3] சிறுகதை இடம்பெற்றுள்ளது.
விருதுகள்
- கேரள சாகித்ய அகாதமி விருது (2009)
- அங்கணம் விருது
- லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது
- பி.யூ.சி.எல். விருது
- சொவ்வர பரமேசுவரன் விருது