குவோமிந்தாங்

குவோமிந்தாங் அல்லது சீனத் தேசியவாதக் கட்சி தாய்வானில் அமைந்துள்ள சீனக் குடியரசின் ஒரு அரசியல் கட்சியாகும். இடங்களின் அடிப்படையில் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய கட்சியும் நாட்டின் மிகப் பழைய கட்சியும் இதுவே. குவோமிந்தாங் அனைத்துலக சனநாயக ஒன்றியத்தின் ஒரு உறுப்புக் கட்சியாகும்.

சீனக் குவோமிந்தாங்
中國國民黨
中国国民党
தலைவர்வு போ-ஹ்சியுங்
தொடக்கம்1919-10-10 (தற்கால)
1894-11-24 (சீன சமூக மீள்விப்பு இயக்கமாக)
தலைமையகம்232–234 பேட் வீதி, Sec. 2
ஷோங்ஷான் மாவட்டம், தாய்ப்பே நகரம், தாய்வான், சீனக் குடியரசு
செய்தி ஏடுசெண்ட்ரல் டெய்லி நியூஸ்
உறுப்பினர்  (2006)1,089,000
கொள்கைமக்களுடைய மூன்று கோட்பாடுகள்,
பழமைவாதம்,
பொதுவுடமை எதிர்ப்பு,
மைய-வலது,
சீனத் தேசியவாதம்,
சீன ஒருங்கிணைப்பு.
பன்னாட்டு சார்புஅனைத்துலக சனநாயக ஒன்றியம்
நிறங்கள்நீலம்
இணையதளம்
www.kmt.org.tw

மக்கள் முதற்கட்சி (People First Party), சீன புதுக் கட்சி (Chinese New Party) ஆகியவற்றுடன் குவோமிந்தாங்கும் சேர்ந்து பான்-புளூ கூட்டணி எனப்படுகின்றது. இவை சீனாவின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக உள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.