குவெல் பூங்கா

பார்க் குவெல் (கத்திலான்: Parc Güell) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள பிரபலமான பூங்கா மற்றும் தோட்டத் தொகுதி ஆகும். எசுப்பானியாவில் அமைந்துள்ள பார்சிலோனாவில், கார்மெலோ மலையில் இது அமைந்துள்ளது. 1900 ஆம் மற்றும் 1914 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இப்பூங்காத்தொகுதி கட்டப்பட்டது. பிரபல கட்டிடக்கலை வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினாலே (Antoni Gaudí) இது வடிவமைக்கப்பட்டது. நவீன கட்டலோனிய வடிவமைப்பில் இது கட்டப்பட்டது. ஆம் ஆண்டு இது மக்களுக்காகத் திறந்து வைக்கபட்டது. "அந்தோனி கோடியின் படைப்புக்கள்" எனும் தலைப்பில் 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் ஆம் ஆண்டில் செய்து வைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் 100 போட்டியாளர்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது. [1]

Park Güell
பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள இரு பெரும் கட்டிடங்கள்
அமைவிடம்கிராசியா (Gràcia), பார்சிலோனா, காட்டலோனியா, எசுப்பானியா
ஆள்கூறு41°24′49″N 2°09′10″E
ஆரம்பம்1914

படத்தொகுப்பு

வெளி இணைப்புக்கள்

  1. "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es (2007-11-27). பார்த்த நாள் 2014-10-06.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.