குளிர் பதனூட்டி

குளிர் பதனூட்டி (Refrigerant) என்பது ஒரு வெப்ப இறைப்பியிலோ குளிரூட்டல் சுழல்வட்டத்திலோ பயன்படுத்தப்படும் ஒரு பொருள் அல்லது கலவையாகும். இது பொதுவாக ஒரு பாய்மப் பொருளாக அமைந்திருக்கும். பெரும்பாலான சுழற்சிகளில் இப்பொருள் நீர்ம நிலையில் இருந்து வளிமமாகவும், மீண்டும் நீர்மமாகவும் வாகை மாற்றங்களுக்கு உட்படும். இருபதாம் நூற்றாண்டில், குளோரோ புளோரோ கார்பன் போன்ற புளோரோ கார்பன்கள் குளிர் பதனூட்டியாகப் பரவலாகப் பயன்பட்டது என்றாலும், அவற்றால் ஓசோன் படலத்தில் குறைபாடு உண்டாகிறது என்பதால், அவற்றின் பயன்பாடு மெல்லக் குறைக்கப்பட்டு வருகிறது. பொதுப் பயன்பாட்டில் இருக்கும் பிற குளிர் பதனூட்டிகளாவன: அம்மோனியா, சல்பர் டையாக்சைடு, புரோப்பேன், முதலியன.[1]

References

  1. Siegfried Haaf, Helmut Henrici "Refrigeration Technology" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, எஆசு:19 10.1002/14356007.b03 19
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.